மதுரை: அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம், 1963 ன் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு மத்திய அரசுக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மக்களவை எம்பி எஸ்.வெங்கடேஷ் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையின் தீர்ப்பில் மெட்ராஸ் உயர்நிதிமன்றத்தின் மதுரைக் கிளை மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மாநில அரசு எந்த மொழியில் ஒரு செய்தித் தொடர்பை செய்கிறதோ, அதே மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
"ஆங்கிலத்தில் ஒரு தகவல் தொடர்பு இருக்கும்,போது, ஆங்கிலத்தில் மட்டுமே பதில் அளிப்பது மத்திய அரசின் கடமை" என்றும் நீதிமன்றம் தெளிவுபடக் கூறியது.
ALSO READ | தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை
குரூப் பி மற்றும் குரூப் சி ஆகியவற்றில் 780 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்காக புதுச்சேரியில் தமிழ்நாடு தேர்வு மையத்தை அமைக்கவில்லை. எனவே குறைந்தபட்சம் அங்கு ஒரு தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று அக்டோபர் 9 ஆம் தேதி உள்துறை அமைச்சகத்திற்கு மதுரை மக்களவை எம்.பி கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆனால், அதற்கு மத்திய அரசு நவம்பர் 9 அன்று அனுப்பிய பதில் இந்தியில் இருந்தது. உள்துறை இணை அமைச்சர் அனுப்பிய பதில் என்னவென்று புரிந்துக் கொள்ள முடியவில்லை என மதுரை மக்களவை எம்பி எஸ்.வெங்கடேஷ் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த பொதுநலன் மனு (PIL), நீதிபதிகள் என் கிருபாகரன் மற்றும் எம் துரைசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சிடம் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த பெஞ்ச், "கேள்வி ஒன்றுக்கு இந்தியில் பதிலளிப்பது சட்டத்தை மீறுவதாகும். தங்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு மத்திய அரசுக்கு தமிழக மக்கள் அனுப்பும் கடிதங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஹிந்தியில் பதிலளித்து வருகிறது. இது அரசியலமைப்பு சட்ட உரிமைகள் மற்றும் 1963 இன் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்திற்கு எதிரானது."
மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும். இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பு.#HighCourt #Tamil #UnionGovt
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 19, 2021
"இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை அவமதிப்பதாக இது இருக்கிறது. எனவே, மத்திய அரசு இனிமேல், தமிழக அரசு, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தியில் கடிதங்கள் அனுப்பக்கூடாது. மத்திய அரசு ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்களை அனுப்ப வேண்டும். விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மதுரை டிவிஷன் பெஞ்சின் தீர்ப்பு மத்திய அரசை கடுமையாக கண்டித்துள்ளது.
READ ALSO | அதிமுக உறுப்பினர்கள் தாமாகவே வெளியேறினர் – சபாநாயக்கர் அப்பாவு
தமிழகத்திற்குக் மிகவும் முக்கியமான இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் என் கிருபாகரன் மற்றும் எம் துரைசாமி அடங்கிய பெஞ்ச், "தாய்மொழி மிகவும் முக்கியமானது. தாய் மொழியில் அடிப்படை கல்வி வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பொருளாதார அடிப்படையில் ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது" என்று கூறியது.
மேலும், "எந்தச் செய்தியாக இருந்தாலும், தாய் மொழியில் புரிந்துகொள்ளும்போதுதான் விளக்கம் முழுமையடைகிறது. ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவத்தையும் அரசு உணர்ந்து அவற்றின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றும் இந்த முக்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்திய அலுவலக மொழிச் சட்டமும் இதை உறுதி செய்கிறது. எனினும், இந்த வழக்கில் மனுதாரருக்கு இந்தியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது," என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இதற்கு தனது கருத்தைக் கூறிய மத்திய அரசு, விதிமுறைகளை மீறும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR