மதுரை:கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை தமிழக அரசும், அந்தந்த மாவட்ட அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
ALSO READ ஓமைக்ரான் வைரஸ்: விமான நிலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
இந்நிலையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் மதுரை மாவட்டத்தில் தான் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை மிக குறைவில் இருப்பதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் இதுகுறித்து கூறினார். மேலும் இதே நிலை நீடித்தால் உருமாறிய கொரோனா தொற்றான ஓமிக்ரானாலும் மதுரை மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.
அதனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் தெரிவித்தார். முதல் டோஸ் செலுத்திய பலரும் இரண்டாவது டோஸ் செலுத்தவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். அதன்படி பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். மேலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் மக்கள் சோதிக்கப்படுவார்கள்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்க்கெட், மால், வணிக வளாகங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள், பார்கள், டாஸ்மாக், அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாவிட்டால், ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கப்பட்ட அந்த ஒரு வார அவகாசத்திற்கு பின்னரும் மக்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ALSO READ மதுரையில் உடல்நலக்குறைவால் 'புத்தக தாத்தா' காலமானார் !
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR