Vijay Antony Post about his Daughter: நடிகரும் இசையமைப்பாளருமான் விஜய் ஆண்டனியின் மகள் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தன் மகளின் இறப்பிற்கு பிறகு, விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பகத்தில் ஒரு ட்வீட்டினை வெளியிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி பதிவு..
உயிரிழந்த தனது மகள் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள பதிவில், “என் மகளுடன் சேர்ந்து நானும் இறந்து விட்டேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
— vijayantony (@vijayantony) September 21, 2023
மேலும், “என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட்டு சிறந்த ஜாதி , மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளூக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன்,. அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்...” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை:
தமிழ் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர், விஜய் ஆண்டனி. இவரது மகள் மீராவிற்கு 16 வயதாகிறது. இவர், சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவர், இரண்டு நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி திரையுலகினர் மட்டுமின்றி மக்களுக்கும் பேரிடியை கொடுத்தது. அவரது தற்க்கொலைக்கான காரணம் என்ன என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | விவேக் முதல் விஜய் ஆண்டனி வரை..பேரிழப்பை சந்தித்த சினிமா பிரபலங்கள்..!
உடல் அடக்கம்..
விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதில், அந்த குழந்தையுடன் பள்ளியில் படித்த தோழிகள், ஆசிரியைகள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பரத், சிபிராஜ், சத்யராஜ், சின்மயி, மிஷ்கின், உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினர். இறந்து போன மீரா, பள்ளியின் தலைவராக இருந்ததாகவும் அவர் மிகவும் பொறுப்பானவராகவும் தைரியமானவராகவும் செயல்பட்டதாகவும் அவரின் ஆசியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எல்லை மீறிய மீடியாக்கள்..!
பிரபலங்கள் இறந்து விட்டாலோ அல்லது அவர்களின் வீட்டில் ஏதேனும் துக்க நிகழ்வு ஏற்பட்டாலோ அங்கு பத்திரிக்கையாளர்கள் குவிந்து விடுவது வாடிக்கையாகி வருகிறது. அதிலும் சிலர், துக்க வீட்டிற்கு வருபவர்களை இடை மறித்து அவர்களிடம் பேட்டி எடுக்கின்றனர். ஒரு சிலர், குடும்பத்தினர் துக்கத்தில் இருப்பதையும் படம் பிடித்து லைவாக தங்களது சேனல்களில் ஒளிபரப்புகின்றனர். இது, விஜய் ஆண்டனி வீட்டின் துக்க நிகழ்வில் கை மீறிப்போனது. ஒரு சில ஊடக சேனல்கள், துக்க வீட்டிற்கு வந்திருந்தவர்களை வழி மறித்து “அவரது தற்கொலைக்கு காரணம் என்ன? தைரியமான பெண் தானே, ஏன் இந்த முடிவெடுத்தார்..?” என்று விடாமல் கேள்வி எழுப்பினர். அவர்கள் பேட்டி கொடுக்க விருப்பமில்லை என்று கூறியபோதிலும் சிலர் விடவில்லை. இந்த சம்பவம் பிரபலங்கள் உள்ளிட்ட பலரின் கண்டனத்திற்கு உள்ளானது.
பாரதிராஜா கண்டனம்:
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடிகரும் இயக்குநருமான பாரதிராஜா தனது சங்கத்தின் சார்பில் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா..?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், துக்க நிகழ்வை மீடியாக்கள் படம் பிடிக்க கூடாது என்றும் காவல் துறையின் அனுமதி பெற்ற பிறகே வீடியோ எடுக்க வேண்டும் என்றும் அவர் அஹ்தில் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து, பல பிரபலங்கள் தொடர்ந்து விஜய் ஆண்டனி வீட்டில் ஊடகத்தினர் நடந்து கொண்ட விதத்திற்கு கண்டன குரல்களை எழுப்பினர். ஒரு சில ஊடக நிறுவனங்கள், தாங்கள் இனி இது போன்ற நிகழ்வுகளை படம் பிடிக்க போவதில்லை என்று குறிப்பிட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | “சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?” ஊடகங்கள் மீது பாரதிராஜா காட்டம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ