பொள்ளாச்சி மாதிரி விருதுநகரை விடமாட்டோம்... தண்டனையை இந்தியாவே திரும்பி பார்க்கும் - மு.க.ஸ்டாலின்

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பொள்ளாச்சி சம்பவத்தை போல் இல்லாமல் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Mar 23, 2022, 01:56 PM IST
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்
  • விருதுநகர், வேலூர், சென்னையில் நடந்த குற்றங்களை குறிப்பிட்டு தீர்மானம் தாக்கல்
  • விருதுநகர் சம்பவத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சி மாதிரி விருதுநகரை விடமாட்டோம்... தண்டனையை இந்தியாவே திரும்பி பார்க்கும் - மு.க.ஸ்டாலின்  title=

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. 

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு, நிர்பயாவை போன்று வேலூரில் இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்முன்னே அவரது பாதுகாவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் என பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். 

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த தீர்மானத்தின் சாராம்சம் :

விருதுநகர் நிகழ்வு

விருதுநகர் கஸ்தூரி பாய் நகரைச் சோந்த 22 வயது பெண்ணுடன் அதே பகுதி பெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் பழகி வந்துள்ளார். தனி முறையில் தன்னுடன் பழகியதை ஹரிஹரன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின் வீடியோவை வைத்து மிரட்டி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு அந்த வீடியோவை அவரது நண்பர்களுக்கு முக்கியமாக தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜூனைத் அகமது அவரிடமும், மாடசாமி மற்ற நான்கு பேர்களுக்கும் அனுப்பி உள்ளார். இவர்கள் 6 மாத காலமாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டும், கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது போன்று எத்தனை பெண்களை அவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியுள்ளார்கள் என்பது தெரியவில்லை. இதை முறையாக விசாரித்து, குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வேலூர் நிகழ்வு

இது போன்று இந்த வாரம் வேலுர் காட்பாடியில் இரவு காட்சி பார்த்து விட்டு வந்த ஒரு ஆண் மருத்துவர் மற்றும் பெண் மருத்துவரை ஆட்டோவில் வீடு திரும்பிய போது, ஆண் மருத்துவரை தாக்கிவிட்டு, பெண் மருத்துவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து புகார் வரப்பெறவில்லை என்று, குற்றம் செய்தவர்களை விசாரித்துவிட்டு காவல்துறையினர் விடுவித்துவிட்டதாக தகவல் தெறிகிறது. குற்றம் செய்தவர்களே குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் காவல்துறையினர் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மேலும் படிக்க | One more Nirbaya: என்று தீரும் இந்த நிர்பயா பாணி பாலியல் வன்கொடுமைகள்?

edappadi

கோவை / கன்னியாகுமரி நிகழ்வு

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மணிமாறன் என்கிற சின்னதம்பி கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் தான் ஒரு நடன ஆசிரியர் என்று கூறி அங்குள்ள மாணவ மாணவியருக்கு நடன வகுப்புகள் நடத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16 வயது சிறுமியை கடத்திச்சென்று, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் தங்கியிருந்தார்.

பிறகு சுசீந்திரத்தில் தங்கியிருந்த போது இங்குள்ள 19 வயது இளம் பெண்ணையும் கடத்திச்சென்று தலைமறைவானார். கோவை மற்றும் கன்னியாகுமரி காவல்துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்த நிலையில் இவர்கள் மூவரையும் கைது செய்ய தனிப்டைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த இளம்பெண் தனது வீட்டினரை தொடர்புகொண்டு, தாங்கள் திருப்பதியில் இருப்பதாகவும், தங்களை ما விற்க வைத்து ஆசிரியர் மணிமாறன் பொடுமைப்படுத்துவதாகவும் கூறி அழுதுள்ளார். விவரம் அறிந்து தனிப்படை காவல்துறையினர் திருப்பதிக்கு சென்று தலைமறைவாக இருந்த மணிமாறனை கைது செய்து இரண்டு பெண்களை மீட்டனர்.

இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் திமுக அரசு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாகியுள்ளன. எனவே காவல்துறையினர் இரும்புக் கரம் கொண்டு குற்றங்களை தடுக்க வேண்டும்.

சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதி முன்பே அவரது பாதுகாவலருக்கு அரிவாள் வெட்டு

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சக்திவேல் (52) ஆயுதப்படை காவலரான இவர் ஓய்வு பெற்ற நீதிபதியும், 4வது காவல்துறை கமிஷனின் தலைவருமான பணியாற்றி வருகின்றார். சி.டி.செல்வம்
அவர்களின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் 22.3.2022 அன்று காலை நீதிபதியுடன் காரில் அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அசோக் நகர் சிக்னல் அருகே வரும் போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உடனே சக்திவேல் காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சரி செய்ய முன்றுள்ளார். அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்ள - தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அசோக் நகர் போலீசார் படுகாயமடைந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக வடபழனியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அசோக் நகர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிவருகின்றனறதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அசோக் நகர் போலீசார் படுகாயமடைந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அசோக் நகர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிவருகின்றனறதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகரின் மையப்பகுதியிலேளே, 4வது காவல் துறை கமிஷனின் தலைவர் அவர்களது பாதுகவலருக்கே பட்டப்பகலில் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வேதனையானது, வெட்கக்கேடானது. எனவே குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

Stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். சென்னையில் நீதிபதி பாதுகாவலரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மீதம் உள்ள 4 பேர் சிரார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Viruthunagar

மேலும், இந்த வழக்கு தனிநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என கூறினார். மேலும், பொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம், வண்ணாரப்பேட்டை 13 வயதி சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் போல் அல்லாமல் விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

தமிழகத்திற்கு மட்டும் இல்லாமல் விரைந்து நடவடிக்கை எடுப்பதில் இந்தியாவே திரும்பி பார்க்கும்படி விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை அறிவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

மேலும் படிக்க | பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தொடங்கியது சிபிசிஐடி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News