சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம்!

சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!! 

Last Updated : Aug 22, 2019, 12:17 PM IST
சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம்! title=

சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!! 

சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நில அளவீடு பணிகள் முடிவுற்ற நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், 8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து 8 வழி சாலை திட்ட மேலாண்மை இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.  இந்த மேல்முறையீட்டு வழக்கில், 8 வழி சாலை திட்டத்தின் சிறப்பு அம்சங்கள், பயன்கள், மக்கள் தெரிவித்த கருத்துக்களை மத்திய அரசு இன்று அறிக்கையாக தாக்கல் செய்தது. 

அதில், 8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன என்பது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கும் வரை எந்தவொரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் இவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று தொடங்கியது. அப்போது, 8 வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தாமதம் ஆனால் என்ன செய்வீர்கள்? என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, சுற்றச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை அமைக்கப்பட மாட்டாது, அந்த திட்டத்தை தொடங்க மாட்டோம், என தெரிவித்தது.

 

Trending News