பீகார் எதிர்கட்சியினர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன?

CM Stalin: 2023ஆம் ஆண்டு ஜூன்‌ 23 ஆம்‌ தேதி கூடினார்கள்‌ - 2024 மே மாதம்‌ வெற்றி பெற்றார்கள்‌ என்பது மட்டும்தான்‌ வரலாற்றில்‌ பதிவாக வேண்டும்‌ என்று பீகார் எதிர்கட்சிகள் கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாக பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 23, 2023, 09:06 PM IST
  • எதிர்கட்சி தலைவர்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.

    ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை - மு.க. ஸ்டாலின்
  • பிரதமர் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - மு.க. ஸ்டாலின்
பீகார் எதிர்கட்சியினர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன? title=

CM Stalin About Bihar Opposition Meet: பீகார்‌ மாநிலம்‌, பாட்னாவில்‌ நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின்‌ ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இன்று (ஜூன் 23)‌ கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை‌ விமான நிலையத்திற்கு வந்த மு.க. ஸ்டாலின்‌ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியாவின்‌ ஜனநாயகத்தைக்‌ காப்பாற்றுவதற்காக பல்வேறு கட்சிகளின்‌ கலந்தாலோசனைக்‌ கூட்டம்‌ பீகாரின்‌ தலைநகரான பாட்னாவில்‌ நடைபெற்றது. அதில்‌ கலந்துகொள்வதற்காக நானும்‌ திமுக‌ பொருளாளர்‌ டி.ஆர்‌.பாலுவும்‌ சென்றிருந்தோம்‌.

மிகுந்த மகிழ்ச்சியையும்‌, நம்பிக்கையையும்‌ உருவாக்குவதாக இந்தக்‌ கூட்டம்‌ அமைந்திருந்தது. அகில இந்திய தலைவர்கள்‌ அனைவரையும்‌ நான்‌ சந்தித்தேன்‌. குறிப்பாக நேற்று மாலை நான்‌ பாட்னா சென்றவுடன்‌ விமானநிலையத்திலிருந்து நேரடியாக லாலு பிரசாத்‌ யாதவ் இல்லத்திற்கு சென்று, அவருடைய உடல்நிலை விசாரித்து, சிறிது நேரம்‌ பேசிக்‌ கொண்டிருந்தேன்‌. அது எனக்கு பெரிய உற்சாகத்தை தந்தது.

மேலும் படிக்க | இந்தியாவில் முதலீடு: பிரதமர் மோடி அழைப்பு

ஒன்றிய அளவில்‌ ஆட்சியில்‌ இருக்கும்‌ பாஜக ஆட்சியை வீழ்த்துவது என்பதை நோக்கமாகக்‌ கொண்டதாக இந்தக்‌ எதிர்கட்சியின் கூட்டத்தை பீகார்‌ முதலமைச்சர்‌ நிதிஷ்குமார்‌ கூட்டியிருந்தார்கள்‌. பாஜக என்று சொல்வதால்‌ ஏதோ ஒரு தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டமாக மட்டும்‌ இதனை யாரும்‌ நினைக்க வேண்டாம்‌. 

இந்தியாவின்‌ ஜனநாயகத்தை - மக்களாட்சியை - மதச்சார்பின்மையை - பன்முகத்தன்மையை - ஒடுக்கப்பட்ட மக்களை — ஏழை எளிய மக்களைக்‌ காப்பாற்ற வேண்டுமானால்‌ பாஜக மீண்டும்‌ ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்‌ அனைத்துக்‌ கட்சிகளும்‌ மிகத்தெளிவாக இருக்கிறோம்‌. இதில்‌ கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும்‌ என்பதை நான் இன்று காலை பேசுகிறபோது நான்‌ குறிப்பிட்டு சொன்னேன்‌.

2023ஆம் ஆண்டு ஜூன்‌ 23 ஆம்‌ தேதி கூடினார்கள்‌ - 2024 மே மாதம்‌ வெற்றி பெற்றார்கள்‌ என்பது மட்டும்தான்‌ வரலாற்றில்‌ பதிவாக வேண்டும்‌ என்று அந்தக்‌ கூட்டத்தில்‌ நான்‌ அழுத்தம் திருத்தமாக பேசினேன்‌. மதச்சார்பற்ற கட்சிகளின்‌ ஒற்றுமைதான்‌ தமிழ்நாட்டில்‌ அடைந்த அனைத்து வெற்றிக்கும்‌ காரணமாக அமைந்தது.

அதேபோல்‌ அகில இந்திய அளவிலும்‌ ஒற்றுமைதான்‌ முக்கியம்‌ என்பதை நான்‌ வலியுறுத்தி வற்புறுத்தி எடுத்துச்‌ சொன்னேன்‌. சில முக்கியமான ஆலோசனைகளையும்‌ நான்‌ அந்த கூட்டத்திலே வழங்கினேன்‌. 

உதாரணமாக எந்த மாநிலத்தில்‌ எந்தக்‌ கட்சி செல்வாக்குடன்‌ இருக்கிறதோ அந்தக்‌ கட்சி தலைமையில்‌ கூட்டணி அமைத்துக்‌கொள்ளலாம்‌.

கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால்‌ தொகுதிப்‌பங்கீடுகளை மட்டும்‌ செய்து கொள்ளலாம்‌. அதுவும்‌ முடியவில்லை என்றால்‌ பொதுவேட்பாளர்‌ அறிவித்துக்‌ கொள்ளலாம்‌.

தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்துக்‌ கொள்ளலாம்‌ என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது.

அரசியல்‌ கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம்‌ வகுக்கப்பட வேண்டும்‌.

இதுபோன்று எழும்‌ பிரச்னைகளைச்‌ சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக்‌ குழு அமைக்கப்பட வேண்டும்‌. - என்று வரிசையாகச்‌ நான்‌ அந்தக்‌ கூட்டத்திலே பேசுகின்ற போது வலியுறுத்தி சொல்லி இருக்கிறேன்‌. பாஜகவை வீழ்த்துவதை அனைத்துத்‌ தலைவர்களும்‌ ஒற்றை இலக்காகக்‌ கொண்டு இருக்கிறார்கள்‌. பாஜகவை வீழ்த்த அனைத்துக்‌ கட்சிகளும்‌ ஒன்றுபட வேண்டும்‌ என்று நினைத்தோம்‌. அந்த ஒற்றுமை பாட்னாவில்‌ ஏற்பட்டு இருக்கிறது.

ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை. நிச்சயமாக அகில இந்திய அளவில்‌ பாஜக தோற்கடிக்கப்படும்‌ என்பதில்‌ சந்தேகமில்லை. இப்போதுதான்‌ கருவாகி இருக்கிறது. அது உருவாக இன்னும்‌ சில மாதங்கள்‌ ஆகலாம்‌. அடுத்தடுத்த நடவடிக்கைகளை பின்னர்‌ உங்களுக்குத்‌ தெரிவிக்கிறோம்‌. பாட்னாவில்‌ கூடினோம், மகிழ்ச்சியாகத்‌ திரும்பினோம்‌" என்றார். 

மதிய உணவு இடைவேளிக்கு பின் தான் கூட்டு செய்தியாளர் சந்திப்பை வைத்திருந்தனர் என்றும் அதற்குள் தனக்கு விமானம் ஏற வேண்டியிருந்ததால், அங்கு மதிய உணவை சாப்பிடாமலேயே சொல்லிவிட்டு கிளம்பிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அரவிந்த கெஜ்ரிவால் அறிக்கை குறித்த கேள்விக்கு அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் பிரதமர் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் செய்தியாளர்களின் கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.

மேலும் படிக்க | 2024 பொதுத்தேர்தலுக்கான வியூகம்! கையுடன் கைகோர்க்கும் எதிர்கட்சிகளும் விமர்சனங்களும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News