புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பல ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன. இந்த ஆண்டின் கடைசி மாதம் தொடங்கிவிட்டது, அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி இன்று பேசப் போகிறோம். Apple, Samsung முதல் Oppo வரை அனைத்து நிறுவனங்களும் அற்புதமான அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்..
iPhone 13 Pro Max: இந்த ஆண்டு ஆப்பிளின் iPhone 13 தொடருக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர் என்று கூறலாம். இந்தத் தொடரின் சிறந்த மாடலான iPhone 13 Pro Max, நிறுவனத்தின் A15 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது மற்றும் புதிய Super-Retina XDR டிஸ்ப்ளே மற்றும் ப்ரோ-மோஷன் அம்சத்துடன் கூடிய சிறந்த கேமராவுடன் வருகிறது. 1,29,900 ரூபாய்க்கு Flipkartல் வாங்கலாம்.
ALSO READ:iPhone-ல் வருகின்றன அட்டகாசமான புதிய அம்சங்கள்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
Oppo Reno 6 Pro: இந்த Oppo ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது, இதில் முக்கிய சென்சார் 64MP ஆகும். 6.5-இன்ச் AMOLED வளைந்த FHD + டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போனை ரூ.46,990க்கு பதிலாக ரூ.39,990க்கு Flipkart இல் இருந்து எடுத்துச் செல்லலாம்.
Samsung Galaxy Z Flip 3: சாம்சங்கின் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இரண்டு டிஸ்ப்ளேக்களுடன் வருகிறது. இது 6.7 இன்ச் FHD + டைனமிக் AMOLED பிரதான டிஸ்ப்ளே மற்றும் அதன் கவர் ஸ்கிரீன் 1.9 இன்ச் சூப்பர் AMOLED பேனல் ஆகும். 128GB அல்லது 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ. 95,999 ஆனால் இதை பிளிப்கார்ட்டில் இருந்து ரூ.84,999க்கு வாங்கலாம்.
oneplus 9 pro: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பற்றி பேசுகையில், OnePlus இன் பெயர் முதலில் வரும். OnePlus 9 Pro ஆனது 4,500mAh பேட்டரி, 65W வார்ப் சார்ஜ் ஆதரவு மற்றும் 6.7-இன்ச் வளைந்த குவாட் HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 11ல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனை அமேசானில் இருந்து ரூ.69,999க்கு பதிலாக ரூ.64,999க்கு வாங்கலாம்.
Jio Phone Next: ஜியோவின் முதல் 4ஜி ஸ்மார்ட்போன், இது உலகின் மலிவான 4ஜி போன் என நம்பப்படுகிறது. கூகுள் மற்றும் ஜியோவின் இந்த போனில், 5.5 இன்ச் HD+ ஸ்கிரீன் மற்றும் 3,500mAh பேட்டரியைப் பெறுவீர்கள். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,999 மட்டுமே.
ALSO READ:Flipkart Sale: வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கு புது Samsung 5G Phone
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR