எஸ்.பி.ஐ. வங்கியின் மேலாண்மை இயக்குனராக அர்ஜித் பாசு பொறுப்பேற்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குனராக அர்ஜித் பாசு பொறுப்பேற்றுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 3, 2018, 02:17 PM IST
எஸ்.பி.ஐ. வங்கியின் மேலாண்மை இயக்குனராக அர்ஜித் பாசு பொறுப்பேற்ப்பு title=

பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குனராக அர்ஜித் பாசு நேற்று நியமனம் செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கியின் துணை மேலாண்மை இயக்குனராக பதவி வகித்து வந்தார். தற்போது அவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவரானா அர்ஜித் பாசு, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னரே வங்கித்துறையில் கால் பதித்தார். இவர் பொருளாதாரம் மற்றும் வரலாற்றில் பட்டதாரி பட்டமும் பெற்றுள்ளார். 

மேலும் இவர் எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் துறையில் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஆகஸ்ட் 2014 முதல் மார்ச் 2018 வரை பணியாற்றி உள்ளார். இவர் பணியாற்றிய அக்டோபர் 2017 காலத்தில் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி வட்ட முதன்மை பொது மேலாளராகவும், ஜப்பானின் டோக்கியோவில் பிராந்திய தலைமை மற்றும் நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் கிரெடிட் கார்ட் மற்றும் ஐ.டி பிரிவு சார்ந்த துறைகளை அர்ஜித் பாசு கையாள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News