உலகின் முதல் 17.3 இன்ச் ஃபோல்டபிள் OLED லேப்டாப்- ஜென்புக் 17 போல்டு OLED சமீபத்தில் நடந்து முடிந்த 2022 சிஇஎஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. அசுஸ் நிறுவனத்தின் ஃபோல்டபிள் லேப்டாப்பிற்கான இந்திய முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. புதிய லேப்டாப்-ஐ உருவாக்க பிஒஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியதாக அசுஸ் தெரிவித்திருக்கிறது. இதில் 17 இன்ச் 2.5K ஸ்கிரீன் உள்ளது. இதனை மடிக்கும் போது 12.5 இன்ச் லேப்டாப் போன்று பயன்படுத்த முடியும்.
அசுஸ் எர்கோசென்ஸ் ப்ளூடுத் கீபோர்டு, டச்பேட் உள்ளிட்டவைகள் அடங்கிய போல்டிங் டிசைன் இருப்பதால், இந்த சாதனத்தை கணினி, லேப்டாப், டேப்லெட், ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு, புக் மற்றும் எக்ஸ்டெண்ட் என ஏராளமோன மோட்களில் பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப் உலகின் முதல் 17.3 இன்ச் மடிக்கக்கூடிய (Foldable OLED) இண்டெல் இவோ சான்று பெற்ற சாதனம்.
Get Ready to Envision a New Reality! Presenting you ASUS Zenbook 17 FOLD OLED, World’s first 17” FOLED (Foldable OLED) laptop Book Now to Get Exclusive Cashback and Exchange Offers#UnfoldtheIncredible! #ASUSIndia #IntelEvo #Laptops
— ASUS India (@ASUSIndia) October 14, 2022
புதிய ஜென்புக் 17 போல்டு மாடலில் இரண்டு யுஎஸ்பி சி தண்டர்போல்ட் 4 போர்ட்கள், பெரிய 75Wh பேட்டரி, 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் XE GPU மற்றும் இண்டெல் வைபை 6E போன்ற அம்சங்கள் உள்ளன. அதேபோல், 17.3 இன்ச் 2560x1920 பிக்சல் FOLED டிஸ்ப்ளே இண்டெல் கோர் i7 பிராசஸர் இண்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் 16 ஜிபி LPDDR5 ரேம் 1 டிபி (1000 ஜிபி) NVMe PCie 4.0 SSD விண்டோஸ் 11 ஹோம் / ப்ரோ சாஃப்ட் கீபோர்டு, 1.4mm கீ-டிராவல் 5MP பிரைமரி கேமரா, IR அம்சம் US MIL-STD 810H ராணுவ தரம்
புதிய அசுஸ் ஜென்புக் 17 போல்டு OLED மாடலை முன்பதிவு செய்வோர், இதனை ரூ. 2 லட்சத்து 84 ஆயிரத்து 290 என்ற விலையில் வாங்கலாம். இத்துடன் ரூ. 5 ஆயிரம் வரை கேஷ்பேக் மற்றும் ரூ. 40 ஆயிரத்து 700 வரை எக்சேன்ஜ் மதிப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 19 ஆயிரத்து 500 மதிப்புள்ள 500 ஜிபி SSD மற்றும் ரூ. 7 ஆயிரத்து 600 மதிப்புள்ள வாரண்டி எக்ஸ்டென்ஷன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், இதன் விற்பனை நவம்பர் 10ஆம் தேதி தொடங்குகிறது. இதன் விலை 3 லட்சத்து 29 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும்.
மேலும் படிக்க | சத்தமில்லாமல் ஜியோ செய்த காரியம்... 12 ரீசார்ஜ் பிளான்கள் காலி - ஐபிஎல் தான் காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ