மற்ற ஸ்மார்ட்போன்களை தூக்கிவீச வருகிறது OnePlus 12... இந்தியாவில் இந்த தேதியில் ரிலீஸ்?

OnePlus 12 Smartphones: OnePlus 12 மற்றும் OnePlus 12R மொபைல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் தேதியையும், நேரத்தையு் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 16, 2023, 05:35 PM IST
  • OnePlus 12 மொபைல் சீனாவில் ஏற்கனெவே அறிமுகப்படுத்தப்பட்டது.
  • OnePlus 12R மொபைல் உலகளவில் அறிமுகமாக உள்ளது.
  • Samsung Galaxy S24 மொபைலுக்கு கடும் போட்டியளிக்கும்.
மற்ற ஸ்மார்ட்போன்களை தூக்கிவீச வருகிறது OnePlus 12... இந்தியாவில் இந்த தேதியில் ரிலீஸ்? title=

OnePlus 12 Smartphones: OnePlus மொபைல் சமீபத்தில் இந்தியாவில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன் நிறுவனமாகும். ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் விலை உயர்ந்த மாடல்கள் தரும் அம்சத்தை இதை அவற்றை விட சற்று குறைவான விலையில் வழங்குவதும், கேமரா, ஸ்டோரேஜ், பேட்டரி போன்ற அடிப்படை அம்சங்களை வலிமையானதாக தருவதாலும் OnePlus நிறுவனத்திற்கு   

OnePlus 12 என அழைக்கப்படும் அதன் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடும் தேதியை அந்நிறுவனம் தற்போது உறுதிப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாத தொடக்கத்தில் அறிமுகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த OnePlus 12 புதிதாக அறிமுகமாகி உள்ள iQOO 12 மற்றும் இன்னும் அறிமுகப்படுத்தப்படாத Samsung Galaxy S24 போன்றவற்றுடன் போட்டியிடும். OnePlus 12 உடன் அதன் மற்றொரு மாடலான OnePlus 12R இருக்கும். OnePlus 12 மற்றும் OnePlus 12R ஆகியவை இந்திய சந்தைகள் உட்பட உலகளவில் ஜனவரி 23ஆம் தேதி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் OnePlus நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் யூ-ட்யூப் சேனலில் அன்றைய இரவு 7.30 மணியளவில் வெளியீடு தொடங்கும். இந்த போன்களின் அறிமுகத்துடன், OnePlus அதன் 10ஆவது ஆண்டு விழாவையும் கொண்டாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | வாட்ஸ்அப் மூலம் கேஸ் சிலிண்டரை புக் செய்வது எப்படி?

OnePlus 12 விவரக்குறிப்புகள்

ஏற்கனவே OnePlus 12 மாடலை அந்நிறுவனம் சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது, ஆனால் OnePlus 12R மாடலை இன்னும் வெளியிடவில்லை. அடுத்த மாதம் நேரடியாக உலக அளவில் அந்த மாடல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. OnePlus 12 மொபைலின் அம்சங்களை பொறுத்தவரை, 1440 x 3168 பிக்சல்களின் 2K ரெஸ்சோல்யூஷன் 6.82-இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. LTPO AMOLED திரையில் 120Hz புதுப்பிப்பு வீத (Refresh Rate) ஆதரவு மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளது.

கேமரா அமைப்பு 

இது பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. பின்புற அமைப்பு 50MP பிரதான லென்ஸ், 64MP பெரிஸ்கோப் சென்சார் மற்றும் 48MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவற்றால் வழிநடத்தப்படுகிறது. பின்புற கேமரா 24fps வரை 8K வீடியோக்களை படமெடுக்கும் திறன் கொண்டது. முன்னதாக, செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32MP கேமரா உள்ளது.

ரிவர்ஸ் சார்ஜிங்

ஸ்மார்ட்போன் 4nm-அடிப்படையிலான Qualcomm Snapdragon 8 Gen 3 பிராஸஸர் மற்றும் 24ஜிபி வரை RAM மற்றும் 1TB SSD ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

அடுத்த மாதம் வெளியீடு

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14  OS மூலம் செயல்படுகிறது. இந்த போன் இந்திய சந்தையில் OxygenOS 14 உடன் வரும் என தெரிகிறது. OnePlus IP65 மதிப்பீட்டையும் கூடுதல் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரையும் வழங்கி உள்ளது. மொபைலை பற்றிய பிற விவரங்கள், அதன் இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை உள்ளிட்டவை அடுத்த மாதம் நடைபெறும் வெளியீட்டு நிகழ்வில் வெளியிடப்படும்.

மேலும் படிக்க | Realme C67 5G: 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம்- 5G போன் வந்தாச்சு...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News