ரூ 699 ரீசார்ஜ் பிளான்..130 நாட்கள் வேலிடிட்டி..பிஎஸ்என்எல் அசத்தல்

BSNL 699 RECHARGE PLAN DETAILS: மிக நீண்ட காலமாக கவனிக்கப்படாத ஒரு BSNL ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றியும், அதன் நன்மைகளை பற்றியும், யாருக்கெல்லாம் இந்த திட்டம் சரியான தேர்வாக இருக்கும் என்பதை பற்றியும் தான் நாம் இங்கே அலசப்போகிறோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 8, 2023, 12:49 PM IST
  • BSNL ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
  • விலை 699 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன?
ரூ 699 ரீசார்ஜ் பிளான்..130 நாட்கள் வேலிடிட்டி..பிஎஸ்என்எல் அசத்தல் title=

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பல்வேறு வகையான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. பிஎஸ்என்எல் அவ்வப்போது தங்களின் பயனர்களுகள் பயன் பாரும் வகையில் சில புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த திட்டம் எல்லா தொலைதொடர்பு வட்டத்திலும் கிடைக்காது. அதன்படி தற்போது நாம் 699 ரூபாய் திட்டத்தை பற்றி காண உள்ளோம். இது கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டமாகும்.

பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் வழங்கும் இந்த திட்டம் நீண்ட காலத்திற்கு ப்ரீபெய்ட் சந்தா தேவைப்படும் ஆனால் நிறைய தரவு தேவைப்படாத பயனர்களுக்கு சரியான தேர்வாகும். இந்த திட்டம் தமிழகம் / சென்னை வட்டார வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். உண்மையாகவே நீண்ட காலத் திட்டத்தைத் தேடும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறதா என்பதை தீர்மானிக்க திட்டத்தின் நன்மைகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

மேலும் படிக்க | 2023இல் இந்தியாவை மிரட்ட இருக்கும் மின்சார கார்கள்... இனி இதுக்குதான் மவுஸ்!

ரூ.699 திட்டத்தின் நன்மைகள்
இதில் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஒவ்வொரு நாளும் 500MB அல்லது 0.5GB அளவிலான FUP டேட்டா, 130 நாட்கள் செல்லுபடியாகும். மொத்ததில் இந்த திட்டத்தின் கீழ் 90 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும், குறிப்பிட்ட FUP டேட்டாவை பயன்படுத்திய பின்னர் இணைய வேகம் 40 Kbps ஆக குறையும். ரோமிங்கை ப்ரௌத்தவரை, எம்.டி.என்.எல்-இல் அதாவது மும்பை அல்லது டெல்லி பகுதிகளில் உள்ள பயனர்களுக்கும் இந்த திட்டத்தின் நன்மைகள் பொருந்தும். பயனர்கள் முதல் 60 நாட்களுக்கு இலவச அழைப்பாளர் டியூன் வசதியையும் பெறுவார்கள்.

பிஎஸ்என்எல் ரூ.699-ஐ ரீசார்ஜ் செய்வது எப்படி
இந்த பிஎஸ்என்எல் ரூ.699 திட்டத்தை பிஎஸ்என்எல் ரீசார்ஜ் / பேமென்ட்ஸ் போர்ட்டலுக்குச் சென்று தேடுவதன் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் Google Pay, PhonePe, paytm உள்ளிட்ட மூன்றாம் தரப்பு மொபைல் ரீசார்ஜ் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.

மேலும் படிக்க | வெறும் ரூ. 5,990 விலையில் ஐபோன்! ப்ளிப்கார்ட்டின் அதிரடி ஆபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News