Google-ன் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: Backup எடுக்காவிட்டால் data அம்பேல்!!

கூகிளின் ப்ளே மியூசிக் சேவை கடந்த ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது. இனி இந்த சேவை கிடைக்காது என்று நிறுவனம் பயனர்களுக்கு அறிவித்திருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 19, 2021, 02:46 PM IST
  • Google, Play Music-க்கு மாற்றாக YouTube Music-ஐக் கோண்டு வந்துள்ளது.
  • பிப்ரவரி 24 க்குப் பிறகு இந்த சேவையில் உள்ள எந்த தரவையும் பயனர்கள் மீட்டெடுக்க முடியாது.
  • Play Music பேக்-அப் எடுக்க நீங்கள் YouTube Music-ன் உதவியைப் பெறலாம்.
Google-ன் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: Backup எடுக்காவிட்டால் data அம்பேல்!!   title=

புதுடில்லி: கூகிள் தனது சேவைகளில் ஒரு சேவையை கூடிய விரைவில் நிறுத்தப் போகிறது. Google தான் நிறுத்தப்போகும் சேவையின் அனைத்து தரவையும் நீக்கிவிடும் என்ற தகவலை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, இந்த சேவையில் உங்களது தகவல்கள் ஏதாவது இருந்தால், சேவை நிறுத்தப்பட்ட பிறகு அதை கண்டுபிடிக்க முடியாது. உங்கள் தரவும் நீக்கப்படலாம்!! அதற்கு முன்னர் இந்த செய்தியில் இது பற்றி கூறப்பட்டிருப்பதை கவனமாக படியுங்கள்.

கூகிளின் இந்த சேவை நிறுத்தப்பட்டது

எங்கள் இணை வலைத்தளமான zeenews.india.com படி, கூகிளின் ப்ளே மியூசிக் சேவை கடந்த ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது. இனி இந்த சேவை கிடைக்காது என்று நிறுவனம் பயனர்களுக்கு அறிவித்திருந்தது.

பிப்ரவரி 24 க்குப் பிறகு தரவு நீக்கப்படும்

பெறப்பட்ட தகவல்களின்படி, கூகிள் (Google) சமீபத்தில் இந்த சேவையை சர்வரிலிருந்தும் நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆகையால், அனைத்து பயனர்களுக்கும் 24 பிப்ரவரி 2021 க்கு முன்பு, Play Music-லிருந்து தங்கள் தரவை அகற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பிறகு, நிறுவனம் இந்த சேவையை அதன் சேவையகத்திலிருந்து (Server) நீக்கும். அதாவது, எதிர்காலத்தில், பயனர்கள் இந்த சேவையில் உள்ள தரவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Tech tips: Software இல்லாமல் Pen Drive-ஐ லாக் செய்து password போடுவது எப்படி தெரியுமா?

எந்த தரவை இழக்கும் அபாயம் உள்ளது

பல பயனர்கள் தங்கள் ம்யூசிக் லைப்ரரி, பரிவர்த்தனைகள் மற்றும் இசைக் கோப்புகளை Play Music-ல் பதிவேற்றினர். பிப்ரவரி 24 க்குப் பிறகு இந்த சேவையில் உள்ள எந்த தரவையும் (Data) பயனர்கள் மீட்டெடுக்க முடியாது என்று நிறுவனம் கூறியுள்ளது.

இதன் மாற்று YouTube Music

தகவல்களின்படி, Google, Play Music-க்கு மாற்றாக YouTube Music-ஐக் கோண்டு வந்துள்ளது. அனைத்து Play Music பயனர்களும் அவர்களின் தரவும் YouTube Music-ல் மாற்றப்படுவார்கள்.

இந்த வகையில் பேக்-அப் எடுக்கலாம்

Play Music பேக்-அப் எடுக்க நீங்கள் YouTube Music-ன் உதவியைப் பெறலாம். Play Store-ரிலிருந்து YouTube Music-ஐ பதிவிறக்கம் செய்து இசை செயலியின் முழு தரவையும் அதில் மாற்றிக்கொள்ளலாம்.

ALSO READ: Cheapest Recharge Plans: 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஏர்டெல், ஜியோ ரீசார்ஜ்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News