புதுடெல்லி: ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது கார்களுக்கு ஏப்ரல் 2022 இல் வலுவான சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனம் தனது அனைத்து கார்களுக்கும் இந்த சலுகைகளை வழங்கியுள்ளது, இது ஏப்ரல் 30 வரை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிட்டியின் ஐந்தாவது மற்றும் நான்காம் தலைமுறை, ஹோண்டா டபிள்யூஆர்வி (டபிள்யூஆர்-வி) மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகியவற்றில் இந்த தள்ளுபடிகள் கிடைக்கும். ஹோண்டா கார்ஸ் இந்தியா இந்த அனைத்து கார்களுக்கும் மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து மொத்தம் ரூ.35,596 வரை சலுகைகளை வழங்கியுள்ளது. எந்தெந்த கார்களில் எவ்வளவு தள்ளுபடிகள் என்பதை விரிவாக காண்போம்.
ஹோண்டா சிட்டி 5வது தலைமுறை: இந்த செடானில் அதிகபட்சமாக ரூ.30,396 தள்ளுபடியை நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் ரூ.5,000 வரை ரொக்க தள்ளுபடி, ரூ.5,396 கார் எக்ஸ்சேஞ்ச் நன்மைகள், பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ரூ.7,000 வரை ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.8,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க | ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த வகை கார்களுக்கு அபராதம் - தப்பிக்க வழி
ஹோண்டா சிட்டி 4வது தலைமுறை: நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டிக்கு ரூ.20,000 வரை மொத்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸையும், ரூ.7,000 வரையிலான ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும், இந்த காருக்கு ரூ.8,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடியையும் நிறுவனம் வழங்கியுள்ளது.
ஹோண்டா ஜாஸ்: இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்கில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.33,158 வரையிலான மொத்த நன்மையை ஹோண்டா வழங்கியுள்ளது. இதில் ரூ.10,000 வரை ரொக்கத் தள்ளுபடி அல்லது ரூ.12,158 வரை எஃப்ஓசி ஆக்சஸரீஸ்கள், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.5,000, பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்சில் ரூ.7,000 மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 வரை அடங்கும்.
ஹோண்டா டபிள்யூஆர்-வி: நிறுவனம் அதன் சப் காம்பாக்ட் எஸ்யூவி ஹோண்டா டபிள்யூஆர்-வி மீது மொத்தம் 26,000 சலுகைகளை வழங்கியுள்ளது, இது அனைத்து பெட்ரோல் வகைகளிலும் வழங்கப்படுகிறது. கார் எக்சேஞ்சில் ரூ.10,000 வரை போனஸ், பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ஹோண்டா கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.7,000 வரை பலன்கள் மற்றும் ரூ.4,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை இதில் அடங்கும்.
ஹோண்டா அமேஸ்: இறுதியாக, நிறுவனம் அமேஸ் சப்-காம்பாக்ட் செடானின் அனைத்து வகைகளிலும் மொத்தம் ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. இதில், ஹோண்டாவின் பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ரூ.6,000 வரை ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி 30 ஏப்ரல் 2022 வரை வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | டாடா நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி: ஏப்ரல் முதல் உயர்கின்றன விலைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR