இந்தியா போஸ்ட் பெயரில் SMS... சைபர் மோசடிக்கு ஆளாகாதீங்க... அஞ்சல் துறை எச்சரிக்கை

டிஜிட்டல் யுகத்தில், நமது பணிகள் பல எளிதாகி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதன் கூடவே, சைபர் குற்றங்களும் ஆன்லைன் மோசடிகளும் கடந்த சில காலங்களாக அதிகரித்து வருகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 19, 2024, 02:31 PM IST
  • அஞ்சல் துறை பெயரில் அனுப்படும் மோசடி SMS செய்தி.
  • சைபர் மோசடியில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை.
  • மொபைல் சேவை வழங்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும்.
இந்தியா போஸ்ட் பெயரில் SMS... சைபர் மோசடிக்கு ஆளாகாதீங்க... அஞ்சல் துறை எச்சரிக்கை title=

டிஜிட்டல் யுகத்தில், நமது பணிகள் பல எளிதாகி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதன் கூடவே, சைபர் குற்றங்களும் ஆன்லைன் மோசடிகளும் கடந்த சில காலங்களாக அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடியில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கும் சம்பவங்கள் குறித்த வழக்கு அடிக்கடி செய்திகளில் காணலாம். அந்த வகையில் இந்திய அஞ்சல் துறை பெயரில் அனுப்படும் போலி எஸ்எம்எஸ் செய்தி குறித்து அஞ்சல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா போஸ்ட் என்ற பெயரில் உங்கள் முகவரியை அப்டேட் செய்யும்படி ஒரு போலி எஸ்எம்எஸ் செய்தி பரவி வருகிறது. PIB Fact Check , அஞ்சல் துறை பெயரில் அனுப்படும் இந்த SMS செய்தி என்பதை மோசடி உறுதி செய்து, மக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

X தளத்தில் பதிவிட்ட இந்திய அஞ்சல் துறை, 'கவனமாக இருங்கள்! மோசடி நபர்கள் இந்தியா போஸ்ட் வாடிக்கையாளர்களை ஏமாற்ற, டெலிவரி தொடர்பான செய்திகளை அனுப்பி வருகின்றனர். உங்கள் தனிப்பட்ட தகவல்களை எந்த இணைப்பிலும் பகிர வேண்டாம். சந்தேகத்திற்கிடமான அழைப்பு, செய்தி அல்லது மின்னஞ்சலைப் பெற்றால், உடனடியாக சக்ஷு போர்ட்டலில் (Chakshu Portal: https://sancharsaathi.gov.in/sfc/ ) புகாரளிக்கவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

 போலி செய்தி விபரம்

மோசடி நபர்கள் அனுப்பும் SMS செய்தியில், வணக்கம் இந்தியா போஸ்ட் வாடிக்கையாளர்களே, உங்கள் பேக்கேஜை டெலிவரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நாங்கள் அதை வழங்கத் தவறிவிட்டோம். மேலும் தகவலுக்கு, 1800 266 6868 என்ற எண்ணில் எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும் அல்லது இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் டெலிவரி தகவலைப் புதுப்பிக்கவும்: https://bit.ly/4aVxIOs. தகவலைப் புதுப்பித்த பிறகு, 24 மணி நேரத்திற்குள் மீண்டும் பேகேஜை வழங்க முயற்சிப்போம். இந்தியா போஸ்ட்டை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.
மின்னஞ்சல்: Info@indiapost.gov.in I தொலைபேசி: +91 1234567890 I Fac: +91 11 4160565

சைபர் மோசடியில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை:

1. உங்களுக்குத் திடீரென்று முன்பின் தெரியாத எண்ணிலிருந்து செய்தி வந்தால், கவனமாக இருங்கள், குறிப்பாக அது உங்களிடம் தனிப்பட்ட தகவலைக் கேட்டால் அல்லது இணைப்பைக் கிளிக் செய்யும்படி கேட்கும் செய்திக்கு பதிலளிக்கும் முன், அனுப்பியவரின் அடையாளத்தை சரிபார்க்கவும்.

மேலும் படிக்க | பிளிப்கார்ட் பண்டிகை கால சலுகை... ஸ்மார்போன், டிவிக்களுக்கு 80% வரை தள்ளுபடி

2. எஸ் எம் எஸ் செய்தியில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் அல்லது மொழி நடை எவ்வாறு உள்ளது என்பதில் கவனம் செலுத்துங்கள். பொதுவாக மோசடி செய்திகளில் பிழைகள் இருக்கும். அதோடு, தெரியாத எண்களில் இருந்து வரும் மெசேஜ்களில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். இந்த இணைப்புகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட இணையதளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லக்கூடும்.

3. நிறுவனங்கள் அல்லது வங்கிகள் மற்றும் பிற அமைப்புகள், எஸ்எம்எஸ் மூலம் இந்தத் தகவலையும் அளிக்கும் படி ஒருபோதும் கேட்காது. எனவே உங்கள் வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு எண்கள் அல்லது கடவுச்சொற்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒரு போதும் பகிர வேண்டாம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான SMS செய்தி வந்தால், அதை உங்கள் மொபைல் சேவை வழங்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கவும்.

4. உங்களின் அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் வலுவான, வேறுபட்ட கடவுச்சொற்களை உருவாக்கவும் மேலும் பல கணக்குகளுக்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். முடிந்தவரை, கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்க உங்கள் ஆன்லைன் கணக்குகளில் இரு காரணி அங்கீகாரத்தை இயக்கவும்.

மேலும் படிக்க | போன் பேசும் போது... வாய்ஸ் கிளையரா இல்லையா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News