ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் அனைத்து வகையான யூசர்களுக்கும் கிடைக்கின்றன. சில பயனர்கள் நீண்ட கால செல்லுபடியாகும் திட்டங்களையும், சிலர் குறுகிய கால திட்டங்களையும் விரும்புகிறார்கள். அதாவது சில பயனர்கள் 3 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் செல்லுபடியாகும் திட்டங்களை விரும்புகிறார்கள். இதில் தான் அதிக நன்மை இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதற்காக கூடுதலாகவும் கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கின்றனர்.
ஆனால் நீண்டகால திட்டத்துடன் ஒப்பிடும்போது, ஜியோவின் குறுகிய கால, அதாவது ஒருமாத ப்ரீப்பெய்ட் பிளான் மிகவும் சிக்கனமானது. அதேநேரத்தில் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் கொண்டிருக்கும் அனைத்து பயன்களையும் கொண்டிருக்கும். அன்லிமிட்டெட் அழைப்பு, அதிவேக இணையம் உள்ளிட்டவை இருக்கும்.
மேலும் படிக்க | தேவையற்ற அனைத்து WhatsApp படங்கள், வீடியோக்களை ஒரே நேரத்தில் நீக்குவது எப்படி?
ஜியோவின் மலிவான பிளான்
ஜியோவின் மலிவான பிளானின் விலை ரூ.149. இந்த திட்டத்தில் தினமும் 1ஜிபி அதிவேக டேட்டாவுடன் அன்லிமிடெட் அழைப்பு கிடைக்கும். இது 20 நாட்கள் செல்லுபடியாகும். இணையத்தின் தினசரி வரம்பு முடிந்த பிறகு, டேட்டா வேகம் 64Kbps ஆக இருக்கும். இது தவிர, ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பேக் தினசரி 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்ப உதவுகிறது. வரம்பற்ற அழைப்பு மற்றும் இணையத்தை வழங்கும் குறைந்த பணத்திற்கான திட்டத்தை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், ஜியோ பயனர்கள் இந்த திட்டத்தில் சில கூடுதல் நன்மைகளையும் பெறுகின்றனர். கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், இதில் ஜியோ ஆப்ஸின் சந்தாவையும் பெறுவீர்கள். JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud பயன்பாடுகளுக்கான சந்தாக்கள் இதில் அடங்கும். ஜியோ சினிமா மூலம், உங்கள் மொபைல் போனில் டிவி நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். மொபைலில் சமீபத்திய திரைப்படங்களைப் பார்க்கும் விருப்பத்தை ஜியோ சினிமா உங்களுக்கு வழங்குகிறது.
இதேபோல், ஜியோ செக்யூரிட்டி மூலம், உங்கள் தொலைபேசியில் PIN, கடவுச்சொல் மற்றும் கணக்கு எண் போன்ற முக்கியமான தரவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஜியோ கிளவுட் ஃபோனில் உள்ள சேமிப்பகம் நிரம்பியிருக்கும் போது உங்களுக்கு கிளவுட் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வழங்குகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ