ஏர்டெல்லுக்கு பிபி ஏற்றுவதே ஜியோவுக்கு வேலையா போச்சு..! 42 ஜிபி டேட்டா இலவசம்

Jio vs Airtel 719 Plans: ஏர்டெல் நிறுவனத்துக்கு தலைவலியை கொடுப்பதற்காகவே ஜியோ நிறுவனம் புதிய பிளான் ஒன்றை அறிவித்திருக்கிறது. 84 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அதுமட்டுமல்ல இன்னும் சில அம்சங்களும் இந்த திட்டத்தில் இருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 16, 2024, 09:45 AM IST
  • ஜியோ மற்றும் ஏர்டெல் 719 ரூபாய் பிளான்
  • 42 ஜிபி கூடுதல் டேட்டா கொடுக்கும் ஜியோ
  • ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி
ஏர்டெல்லுக்கு பிபி ஏற்றுவதே ஜியோவுக்கு வேலையா போச்சு..! 42 ஜிபி டேட்டா இலவசம் title=

ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக இருப்பது ஏர்டெல் நிறுவனம் தான். இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி இருப்பதால், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒருவருக்கொருவர் புதுப்புது ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. இப்போது ஜியோ அறிவித்திருக்கும் திட்டத்துக்கு வாடிக்கையாளர்கள் தினமும் 8 ரூபாய் செலவழித்தால் உங்களுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். உடனே இந்த திட்டத்தின் விலை என்னவாக இருக்கும் என யோசிப்பீர்கள். ஜியோவின் 719 ரூபாய் திட்டத்தைப் பற்றி தான் இங்கு பார்க்க இருக்கிறோம். ஏர்டெல் நிறுவனமும் இதே விலையில் ஒரு பிளானை கொடுப்பதால், இரண்டில் வாடிக்கையாளர்களுக்கு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க | Moto G4: ரூ.8 ஆயிரத்திற்கும் குறைவா... 8ஜிபி RAM மொபலை தேடுறீங்களா... இதோ உங்களுக்காக!

ஏர்டெல்லின் ரூ.719 திட்டம்

ஏர்டெல்லின் ரூ.719 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற அழைப்பு, தினசரி 1.5 ஜிபி இணையம், ஏர்டெல் பயனர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியை வழங்குகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் 84 நாட்களுக்கு 5G அன்லிமிடெட் இணையத்தைப் பெறுகிறார்கள். மேலும், Hello Tune, Apollo 24|7, Wynk Music இன் இலவச சந்தாவும் திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோவின் ரூ.719 திட்டம்

ஜியோவின் இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் 84 நாட்கள் பயன்படுத்தலாம். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் குரல் அழைப்புகளை வழங்குகிறது. மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், மூன்று ஜியோ திட்டங்களும் ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான இலவச சப்ஸ்கிரிப்சனுடன் வருகின்றன.

எந்த திட்டம் உங்களுக்கு பெஸ்ட்? 

இந்த இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், டேட்டா பயன்பாடில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ஜியோ இதே விலையில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை அதே நாட்களுக்கு அதே விலையில் வழங்குகிறது. ஏர்டெல் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை ரூ.719க்கு வழங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் டேட்டா பயன்பாடு அதிகமாக இருந்தால், ஜியோவின் திட்டம் உங்களுக்கு நன்றாக இருக்கும். அதாவது ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பிடும்போது ஜியோ இந்த ரீச்சார்ஜ் திட்டத்தில் 42 ஜிபி கூடுதல் டேட்டாவை கொடுக்கிறது. 

மேலும் படிக்க | கோடையில் ஃபிரிட்ஜ் வாங்க திட்டமா? ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில்... அமேசான் ஆப்பர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News