சாம்சங் M சீரீஸ் வரிசையில் Galaxy M31s இதோ உங்களுக்காக
அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங்கின் M சீரீஸ் Galaxy M31s புதிய மொபைல் அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. M சீரிஸ் மொபைல்களில் பொதுவாகவே டிஸ்பிளே, சூப்பர் கேமரா, மற்றும் மான்ஸ்டர் பேட்டரி என அனைத்தும் இருக்கும்.
இப்போது புதிதாக களம் இறங்கவுள்ள ஒற்றை தொழில்நுட்ப அம்சம், சாம்சங் மொபைலை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
சாம்சங்கின் ஃபிளாக்ஷிப் மாடல் மொபைல் M சீரிஸில் அறிமுகம் செய்கிறது, #MonsterShot Samsung Galaxy M31s.
Read Also | இறுதியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது Samsung Galaxy A21...
6000mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்ட இந்த புதிய சாம்சங் கேலக்ஸி மொபைலில் உள்ள மான்ஸ்டர் ஷாட் (MonsterShot) அம்சமானது, மொபைல் கேமராவில் பவுன்ஸ், ஃபாஸ்ட் ஃபார்வர்ட், ஸ்மார்ட் கிராப், ரிவர்ஸ் வீடியோ, ஃபில்டர் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, 64 மெகா பிக்சஸ் கேமரா நல்ல அனுபவத்தை கொடுக்கும்.
நாளை மதியம் அறிமுகம் செயப்பட உள்ள சாம்சங் மொபைல் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிச்சயமாக பூர்த்தி செய்யும்.