தொழில்நுட்பம் சாமானியர்களின் வாழ்க்கையில் வசதியைக் கொடுத்தாலும், மறுபுறம் சிம் கார்டு மோசடி சம்பவங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த வகையான மோசடிகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
சிம் கார்டு ஸ்வாப்
மொபைல் சிம் கார்டு பரிமாற்ற மோசடி (SIM SWAPPING) நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. சிம் கார்டு ஸ்வாப் என்பது மொபைல் சிம் கார்டை மாற்றுவதாகும். சிம் கார்டு ஸ்வாப் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் நடப்பது எப்படி? என நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த புதிய மோசயே வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் நடப்பது தான். மொபைல் சேவை வழங்குநரின் உதவியுடன், அதே எண்ணில் புதிய சிம் கார்டை பெற்று இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது. போலி சிம் கார்டு பெற்ற பிறகு வங்கிக் கணக்குகள் தொடர்பாக அனைத்து தகவல்களும் ஓடிபி மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.
மேலும் படிக்க | ஹோண்டா பம்பர் ஆபர்: குறைவான விலையில் கிடைக்கும் கார்கள்
சிம் கார்டு ஸ்வாப் எப்படி நடக்கிறது
1. கிரிமினல் ஃபிஷிங், விஷிங், ஸ்மிஷிங் போன்ற சமூக பொறியியல் நுட்பங்கள் மூலம் ஒரு நபரின் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பெற முடியும்.
2. அதன்பிறகு, ஹேக்கர்கள் அசல் சிம்மைத் செயலிழக்க வைக்க போலி அடையாளச் சான்றுடன் மொபைல் ஆபரேட்டரின் சில்லறை விற்பனை நிலையத்திற்குச் சென்று அசல் சிம் கார்டை பிளாக் செய்கிறார்கள்.
3. வாடிக்கையாளரின் சிம் செயலிழப்பு உறுதி செய்யப்பட்டவுடன், போலி தகவல்களை கொடுத்து புதிய சிம் கார்டை அதே எண்ணில் பெற்றுக் கொள்வார்கள்.
4. இதன்பிறகு உங்கள் வங்கிக் கணக்குகள் தொடர்பான அனைத்து தகவல்களும் சிம் கார்டு மூலம் தெரிந்து கொண்டு வங்கி மோசடிகளை அரங்கேற்றுவார்கள்.
சிம் கார்டு ஸ்வாப்பிங்கில் தப்பிப்பது எப்படி?
1. உங்கள் மொபைல் எண் செயலிழந்தால் மற்றும் வங்கிக் கணக்குகள் அந்தக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், உடனடியாக உங்கள் மொபைல் ஆபரேட்டரைத் தொடர்பு கொள்ளவும்.
2. வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
3. எஸ்எம்எஸ் அலார்ட் மற்றும் மெயில் அலார்ட் செய்து வைத்திருங்கள். உங்களுக்கு தெரியாமல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றால் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.
4. உங்கள் வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்டுகளை எப்போதும் சரிபார்க்க வேண்டும். மோசடி நடந்தால், உடனடியாக வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | பம்பர் ஆபர்! ரூ.5000 வரை விலைகுறைந்தது இந்த Samsung போன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR