WhatsApp Web விரைவில் கைரேகை அங்கீகார அம்சத்தை அறிமுகப்படுத்தலாம்

biometric scanning  மற்றும் உலாவி (browser) சேவையில் உயர் பாதுகாப்பை வழங்குவதற்காக பிரத்யேகமாக ஒரு குழுவை வாட்ஸ்அப் அமைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 23, 2020, 07:19 PM IST
  • ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகளுக்கான அம்சம் வாட்ஸ்அப் 2.20.200.10 பீட்டாவில் காணப்பட்டது.
  • 3D Face Unlocksஐ ஆதரிக்கும் சாதனங்களில் எதிர்காலத்தில் ஃபேஸ் அன்லாக் (Face Unlock) அம்சமும் சேர்க்கப்படுமா என்பது தெரியவில்லை.
WhatsApp Web விரைவில் கைரேகை அங்கீகார அம்சத்தை அறிமுகப்படுத்தலாம்   title=

புதுடெல்லி: biometric scanning  மற்றும் உலாவி (browser) சேவையில் உயர் பாதுகாப்பை வழங்குவதற்காக பிரத்யேகமாக ஒரு குழுவை வாட்ஸ்அப் அமைத்துள்ளது. நீங்கள் WhatsApp Web அதிகம் பயன்படுத்துபவரா? இதோ உங்களுக்கு கூடுதல் பாதுகாப்பை WhatsApp நிறுவனம் விரைவில் கொண்டு வரவிருக்கிறது என்ற நல்ல செய்தி இதோ...  

WhatsApp பயனர்கள், WhatsApp Web பயன்படுத்தும்போது அவர்களின் தரவுகளை பாதுகாக்க உதவும் பயோமெட்ரிக் ஸ்கேனிங் அம்சத்தைச் சேர்க்கும் திட்டத்தை வாட்ஸ்அப் தீவிரமாக செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

பீட்டாவில் (Beta) வாட்ஸ்அப்பைக் கண்காணிக்கும் வலைத்தளமான WABetainfoஇன் கூற்றுப்படி, இந்த மொபைல் மெசேஜிங் தளம் (mobile messaging platform) முழு உலாவி சேவையையும் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்காக பிரத்யேகமாக ஒரு குழுவை அமைத்துள்ளது.

"ஒருவர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப்பைத் திறந்து, கைரேகையை ஸ்கேன் செய்து தங்கள் கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்" என்று WABetainfo வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

WhatsApp web மற்றும் டெஸ்க்டாப் செயலிகளில் (desktop apps) உள்நுழைவதற்கான புதிய வழியில் சில முக்கியமான நன்மைகள் உள்ளன. இவை மிகவும் பாதுகாப்பானவை என்பதோடு, துரிதமாக செயல்படுபவை ஆகும்.  

Read Also | Google Pay இப்போது tap-to-pay அம்சத்தை ஆதரிக்கும், இதன் பயன் என்ன தெரியுமா?

3D Face Unlocksஐ ஆதரிக்கும் சாதனங்களில் எதிர்காலத்தில் ஃபேஸ் அன்லாக் (Face Unlock) அம்சமும் சேர்க்கப்படுமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

தற்போதைய அங்கீகார முறையில், உங்கள் கைப்பேசியின் கேமராவைப் பயன்படுத்தி, உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்கான அணுகலைப் பெற திரையில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.

கூடுதலாக, இந்த செயலி புதுப்பிக்கப்பட்ட பின்னர் சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட ஈமோஜிகளை அகற்ற காரணமாக ஏற்பட்ட பிழைக்கான தீர்வை வாட்ஸ்அப் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகளுக்கான அம்சம் வாட்ஸ்அப் 2.20.200.10 பீட்டாவில் காணப்பட்டது.

Trending News