ரஜினி, கமல், பிரபு உள்ளிட்ட நடிகா்களுடன் நடித்த ஸ்ரீவித்யாவை தமிழ் சினிமாத்துறை எப்போதும் மறக்க முடியாது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவா் இவர். முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த இவா் அனைத்து கதாபாத்திரங்களிலும் திரையில் தோன்றியவர்.
இவா் தனது இறுதி கால கட்டத்தில் கேரள நடிகரும் கணேஷ்குமார் பராமரிப்பில் இருந்து வந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு 2006-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள அபிராமபுரத்தில் அவருக்கு சொந்தமான வீடு நடனப்பயிற்சி பள்ளியாக செயல்பட்டு வருகிறது. ஸ்ரீவித்யா இந்த வீட்டிற்று நீண்ட காலமாக வருமான வரியை செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கிறார்களாம். இந்நிலையில் இந்த வீட்டை வருமான வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது. எனவே ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கியை ஈடு செய்ய அவரது அபிராமபுரம் வீட்டை ஏலத்தில் விட வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு 1250 சதுர அடி கொண்ட இதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பு கொண்டது. இது மார்ச் 27-ம் தேதி ஏலத்திற்கு வருகிறது.
இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீவித்யாவிடம் இருந்து வரவேண்டிய வருமான வரி பாக்கி, வட்டி, ஏலச் செலவுத் தொகையை வசூல் செய்வதற்காக அவரது வீடு ஏலம் விடப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.