மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைக்குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பால் கெட்டுப்போகாமல் இருக்க தனியார் நிறுவனத்தினர் ரசாயன பொருட்களை சேர்ப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார்.
இதைக்குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிடப்பட்ட அறிக்கை கூறியதாவது:-
தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், அதை ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் கூறியுள்ளது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் 2000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்குவதற்கு காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
கரும்புக்கான குறைந்தபட்ச விலை டன் ஒன்றுக்கு 250 ரூபாய் உயர்த்தி மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு போதாது என்ற சூழ்நிலையில் மாநில அரசு கரும்பு டன் ஒன்றுக்கு கொள்முதல் விலையை 3500 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்.
தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். எனவே பழனிச்சாமி தலைமையிலான ஊழல் அரசு பதவி விலக வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை இன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு அமைக்கப்பட்டதன் முதலாமாண்டு நிறைவு விழாவை அக்கட்சியின் ஒரு பிரிவினர் இன்று கொண்டாடுகின்றனர்.
பாஜக-வுடன் எப்போது கூட்டணி வைக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து அறிவிப்போம் என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை சந்தித்துப் பேச இருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
திடிரென டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருடன் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம், தமிழக அரசியலிலும் நிலவும் மாற்றம் என தமிழகத்தில் ஏதாவது ஒரு செய்தி வந்துக்கொண்டு இருக்கின்றன.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்துகின்றனர்.
இந்த முறையின் சோதனையில் அமைச்சருக்குச் சொந்தமாக புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூரில் உள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் கூட்டாளிகள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிக்கிய நகைகள், ஆவணங்களை ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது இழுப்பூரில் சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழக அரசு, அதன் பாராம் தாங்காமல் தானாகவே கவிழும் என ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:-
தமிழகத்தில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று உள்ளதா என்ற நிலை நிலவுகிறது. தமிழகத்தில் மர்மமான மரணங்கள் தொடர்கிறது. கோடையில் மக்களை வாட்டி வதைக்கும் குடிநீர் பிரச்னைக்கு எடப்பாடி நடவடிக்கை எடுப்பதில்லை.
அதிமுக ஆட்சியில் தொழில் தொடங்குவதற்கும் ஒரு தொகை நிர்ணயித்து கையூட்டு கேட்பதால் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் அனைத்து நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வெளியேறி வருகின்றன என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் தகவல் தொழில்நுட்ப வளாகத்தை அமைக்கவிருந்த அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அத்திட்டத்தைக் கைவிட முடிவு செய்திருக்கிறது.
திருமணமாகும் ஏழை பெண்களுக்கு ‘தாலிக்கு தங்கம்’ உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் மே 5-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கிறார்.
காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர் கன்னியாகுமரியில் பயணத்தை முடிக்கிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கான பேச்சுவார்த்தை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. இரு அணியினரும் மாறு பட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் உருவாகவில்லை.
அதிமுக-வின் இரு அணிகளையும் வைத்தும் தமிழகத்தில் வளரும் அளவுக்கு பாஜக இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:-
காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது இந்தி பற்றி ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை, தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளை வைத்து வளரும் நிலை பாஜகவுக்கு கிடையாது.
கோடநாடு உள்ளிட்ட விவகாரங்களில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது மாநில அரசின் கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டது. இரு அணி இணைப்பு பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கை என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி முதல் அதிமுக பிளவுபட்டு 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. இரண்டரை மாத கால இடைவெளிக்கு பிறகு, 2 அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி (அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா), சசிகலா அணி (அ.தி.மு.க. அம்மா) என இரு அணிகள் உதயமான நிலையில், மீண்டும் ஒன்றாக இணையும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்த சசிகலா அணி தரப்பில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் குழுவும், ஓ.பி.எஸ். அணி தரப்பில் முனுசாமி தலைமையில் 7 பேர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
திமுக அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்களும் முழு ஆதரவை அளித்துள்ளன.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக முழு அடைப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஓபிஎஸ் அணியிருடன் நாளை பேச்சு நடத்தப்படலாம் என அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் ஆட்சியை காப்பாற்றவும், இரட்டை இலையை மீட்கவும் தனது நிதி துறையை ஓபிஎஸ் கேட்டால் கூட இழக்க தயார் என்றும் பதில் அளித்தார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சேத்துப்பட்டு ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், டிடிவி தினகரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடைப்பெற்றது.
இரட்டை இலை சின்னம் பெற டெல்லியில் தேர்தல் கமிஷனுக்கு ரூ. 60 கோடி வழங்குவதாக பேரம் பேசிய வழக்கில் தினகரன் நேற்று போலீசார் முன்பு ஆஜரானார். சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேச்சு நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு அணிகள் உதயமான நிலையில், மீண்டும் ஒன்றாக இணையும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அதிமுகவின் இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் 8 வாரம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க., சசிகலா தலைமையில் ஒரு அணி யாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவுபட்டது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கேட்டதால், அது முடக்கப்பட்டது.
இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இரு அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று கொண்டு ஜூன் 16 வரை 8 வாரம் கூடுதல் அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.