முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று பொறுப்பேற்றனர். முதல்வர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் கவர்னர். பதவி பிரமாணம் முடிந்தவுடன் நேராக பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் முன்னால் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் இன்று அழைத்த பிறகு, அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் பதவி அப்படியே நீடிக்கின்றனர்.
சசிகலா விருப்பத்தின்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அரியணையில் அமர்ந்துள்ளார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு காலக்கெடு 15 நாட்கள் விதிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டியை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவை கலைக்கப்படும். தனது பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிப்பாரா? என்று இனிவரும் நாட்களில் தான் தெரியும்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் இன்று அழைத்த பிறகு, அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று பொறுப்பேற்றனர்.
முதல்வர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் கவர்னர்.
முதலில் 8 அமைச்சர்கள் பதவி ஏற்றார். பிறகு அடுத்த 8 அமைச்சர்கள் பதவி ஏற்றார். அதன் பின் 7 பேர் இறுதியாக 7 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
கவர்னர் முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார். கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்த்தார்.
சேலம் மாவட்ட சிலுவம்பாளையத்தில் பிறந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்து முதல்வர் நாற்காலியில் அமர உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் பயணத்தை தெரிந்து கொள்வோம்.
அதிமுக சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு 62 வயதாகிறது. சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம். தந்தை பெயர் கருப்ப கவுண்டர். தாயார் தவுசாயம்மாள். மனைவி பெயர் ராதா. மகன் நிதின் குமார் பி.இ. படித்து உள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கருப்பகவுண்டர்-தவுசாயம்மாள் தம்பதியரின் கடைக்குட்டியாக பிறந்தவர் பழனிச்சாமி.
சசிகலா ஆதரவு எம். எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் 10 நாட்களாக தங்கி உள்ளனர். எம்.பி.க்கள், அமைச்சர்கள், தலைவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் முகாமிட்டு இருந்தனர்.
அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் 15 நாளில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவித்துள்ளனர்.
அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். கவர்னரை, எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார்
நேற்று இரவு எடப்பாடி பழனிச்சாமி கவர்னரை சந்தித்தார். இந்த சந்திப்பானது வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் இந்த சந்திப்பின் போது, சாதகமான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேற்று பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களுரு கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவிட்டது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்து போய்விட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.
இதனையடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா நேற்று பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழகத்தில் நிலவும் வரும் பரபரப்பான அரசியல் குழப்பத்துக்கு முடிவுகட்டும் வகையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று யார் தமிழகத்தின் முதல்வர் என்ற முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது ஊழல் சாயம் வரக்கூடிய அளவுக்கு சசிகலா துணை புரிந்து விட்டதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
நல்ல நிர்வாகம் ஊழலற்ற நிர்வாகம் நடக்கவே தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இந்த சூழ்நிலை ஏற்படவில்லையென்றால் தேர்தலை சந்திப்பது நலமாக இருக்கும் என்றும் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன்:-
சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நகைகள், கைக்கடிகாரங்கள், காலணிகள் மற்றும் கார்களின் மதிப்பு என்ன என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
1996-ல் ஜெயலலிதா தமிழக முதல் அமைச்சர் பதவி வகித்தபோது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் வருமானத்துக்கு மீறி பல கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.
சசிகலாவும் இளவரசியும் சிறையில் அடைக்கப்பட்டன. ஆனால் சுதாகரன் சரணடையவில்லை.
இன்று மாலைக்குள் உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டதால் சாலை வழியாக சசிகலா மற்றும் அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் பெங்களூர் சிறை சாலை சென்றடைந்தார். நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து ஆவணங்களை பார்வையிட்டு வருகிறார். சில நிமிடங்களில் சிறையில் சசிகலா அடைக்கப்படுவார். சசிகலா கணவர் நடராஜன் மாலை 5 மணியளவில் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார். அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர். ஆனால் சுதாகரன் சரணடையவில்லை. சரணடைந்த சசிகலாவும் இளவரசியும் சிறையில் அடைக்கப்பட்டன
பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வெளியில் நின்றவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது
இன்று மாலைக்குள் உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டதால் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்று சரணடைய உள்ளார். சாலை வழியாக சசிகலா மற்றும் அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் பெங்களூர் சிறை சாலை சென்றடைந்தார். நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து ஆவணங்களை பார்வையிட்டு வருகிறார். சில நிமிடங்களில் சிறையில் சசிகலா அடைக்கப்படுவார். சசிகலா கணவர் நடராஜன் மாலை 5 மணியளவில் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார். அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.
பெங்களூரை சிறை சாலை சென்றடைந்த சசிகலா. சில நிமிடங்களில் சிறையில் அடைக்கப்படுவார்.
இன்று மாலைக்குள் உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டதால் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்று சரணடைய உள்ளார். சாலை வழியாக பெங்களூரு செற்ற சசிகலா பெங்களூரை சிறை சாலை சென்றடைந்தார். நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து ஆவணங்களை பார்வையிட்டு வருகிறார். சில நிமிடங்களில் சிறையில் சசிகலா அடைக்கப்படுவார்.
பெங்களூரை சிறை சாலை சென்றடைந்த சசிகலா. சில நிமிடங்களில் சிறையில் அடைக்கப்படுவார்.
இன்று மாலைக்குள் உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டதால் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்று சரணடைய உள்ளார். சாலை வழியாக பெங்களூரு செற்ற சசிகலா பெங்களூரை சிறை சாலை சென்றடைந்தார். நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து ஆவணங்களை பார்வையிட்டு வருகிறார். சில நிமிடங்களில் சிறையில் சசிகலா அடைக்கப்படுவார்.
இன்று மாலைக்குள் உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டதால் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்று சரணடைய உள்ளார். சாலை வழியாக பெங்களூரு செற்ற சசிகலா பெங்களூரை சிறை சாலை சென்றடைந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.