நார்சிங் யாதவுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியால் நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் ‘மெதான்டைனோன்’ என்னும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் நார்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பர்வீன் ராணா இந்திய மல்யுத்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஊக்க மருந்து சர்ச்சையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்ககேற்கயிருந்த இந்திய தடகள வீரர் ஒருவர் சிக்கியிருக்கிறார்.
குண்டு எறிதலில் ஆசிய அளவில் கோப்பைகள் பெற்றவர் இந்திரஜித். இவர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தரப்பில் செல்ல இருக்கும் வீரர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் இவர் போட்டியில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மல் யுத்த வீரர் நரசிங் மீதும் ஊக்க மருந்து புகார் கிளம்பியுள்ளது. அதேபோல் இந்திரஜித்தும் சிக்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.