மகாராஸ்டிர மாநிலம் சோலாபூரின் பள்ளி ஒன்றில் பயிலும் 10 வகுப்பு மாணவர் தன் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருக்கும் தெரசா மே-வை கொல்வதற்காக டவுனிங் தெருவில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் சாலையில் துப்புரவு தொழிலாளியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 மர்ம நபர்கள் துப்புரவு தொழிலாளியை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் குருகிராம் அடுத்த பந்த்சியில் அமைந்துள்ள ரியான் சர்வதேச பள்ளியில், 2ம் வகுப்பு மாணவன் பிரத்யுன் தாகூர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து போலீசார் பலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிறுவனை பாலியல் தொந்தரவு செய்து கொன்றதாகப் பள்ளி பேருந்து நடத்துநர் அசோக் குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில் புது டெல்லியை சேர்ந்த 82 வயதான பெண், அவரது மூன்று மகள்கள் மற்றும் ஒரு ஆண் காவலாளி என 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.
ரஷ்யாவில் 18 ஆண்டுகளாக 30 பேரை கொன்று தின்று வந்த கணவன் - மனைவியை ரஷ்ய நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி பக்சேவ் மற்றும் அவரது மனைவி நடாலியா 18 ஆண்டுகளாக நரமாமிசம் சாப்பிடுகிறார்கள். இவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசுவதை அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதன் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் மனித சதை, தோல் உட்பட பல உறுப்புகளை போலீசார் கண்டுள்ளனர். கொன்றவர்களின் உடல் உறுப்புகளுடன் இருவரும் செல்ஃபியும் எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
மூத்த பத்திரிகையாளர் கே.ஜே. சிங் மற்றும் அவரது 92 வயது தாய் இருவரும் இன்று(சனிக்கிழமை) மொஹலலியில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளனர்.
ANI அறிக்கையின்படி, இருவரும் கொடுரமான நிலையினில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, ஷிமிமாணி அகாலித் தலைவர் சுகுபிர் சிங் பாதல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "மூத்த பத்திரிகையாளர் கே.ஜே. சிங் அவரது தாயுடன் கொலை செய்யப்பட்டது பெரும் வருத்தத்தினை ஏற்படுத்துகிறது" என பதிவிட்டுள்ளார்.
பாலியல் வழக்கில் சிக்கி 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள குர்மீத் ராம் ரஹிம் சிங், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிர்சாவில் உள்ள தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் ஆசிரமத்திற்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி ஹரியானா போலீஸ் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் விசாரணையின் அடுத்தகட்டமாக அங்கு சோதனையும் நடத்தப்பட்டது. இதில் 600 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் குர்மீத் ராம் ரஹிம் சிங்கால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.