இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷம் தான் இந்திய அணியின் பலம் என்று முன்னாள் இந்திய கிர்கெட் அணி சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்துள்ளார். இது அவரது 200-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்து 2-வது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கை முந்தினார் விராட் கோலி.
நேற்று 17 வயதுக்கு உட்பட்ட பிபா உலக கோப்பை கால்பந்து தொடருக்கான அதிகாரப்பூர்வ தீம் சாங் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக் பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ தீம் பாடல் நேற்று கொல்கத்தாவில் வெளியிடப்பட்டது. இந்த பாடலை உள்ளூர் மாநாட்டுக் குழு (LOC) மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் தயாரித்துள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். இந்த பாடல் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் தனித்துவத்தை நிரூபிக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இணைத்து உள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலிக்கு இது 30-வது சதம் ஆகும். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.
அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் சாதனை முறியடிக்க கோலிக்கு இன்னும் 20 சதங்கள் தேவை.
கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு அடையாளம் பதித்த சச்சின் அவர்களின் ஜெர்சி எண்ணான 10 -னை ஷர்துல் தாக்கூர்க்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணிவிளையாடி வருகிறது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் அறிமுகமானவர் தான் இந்த ஷர்துல் தாக்கூர். போட்டியின் பொது அவர் சச்சின் டெண்டுல்கரின் எண்ணான 10னை பொறித்த ஜெர்சியை அணித்திருந்தார்.
தற்போது இந்த விவகாரம் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சச்சினுக்கு அள்ளித எண்ணினை வேறு யாருக்கும் தரகூடாது என சமுக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்திய கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய ராஜ்யசபாவின் எம்.பி., ஆவார். அவர் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற ராஜ்யசபா அமர்வில் கலந்துகொண்டது குறித்து வலைதளங்களில் பரவலாக கேலி செய்யப்பட்டு வருகிறது.
டெண்டுல்கர் இந்த அமர்வில் கலந்து கொண்டார் என்றபோதிலும், எந்த கேள்விகளையும் அவர் கேட்கவில்லை. அதுசமயம் குத்துச்சண்டை வீரர் மேரி கோம் நாடாளுமன்றத்தின் மேல் மாளிகையில் அமைதி காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது ராஜ்யசபா வருகையை பற்றி இரக்கமற்ற முறையில் கேலி செய்தது, மக்களின் கவனதை ஈர்த்து உள்ளது.
சென்னையில் இன்று தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.
கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் முதல் முறையாக கூடுதலாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 அணிகள் இந்த சீசனில் விளையாடுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
புரோ கபடி லீக்கில் சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் முதல் முறையாக கூடுதலாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 அணிகள் இந்த சீசனில் விளையாடுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
'' சச்சின் பில்லியன் ஏ ட்ரீம்ஸ்'' என்ற திரைப்படம் மே 26-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான டிரைலர் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இதன் வெற்றிக்கு தனது டிவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து இருந்தார். பதிலுக்கு ரஜினிக்கு நன்றி தெரிவித்து சச்சினும் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
''நன்றி தலைவா! தமிழில் இந்தப் படத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்று சச்சின் தெரிவித்துள்ளார். சச்சினின் இந்தப் படம் தமிழ், மராத்தி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் வெளி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டோனியின் முடிவை மதிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வழிநடத்திச் செல்லும் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை இபிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், டோனியின் முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்:-
- கடினமான நபராக இருக்க வேண்டும், கடினமான சூழ்நிலையில் சொந்தமாக முடிவெடுத்து செயல்படும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். எந்த ஒரு ஆட்டத்திலும் நெருக்கடி சூழலை திறம்பட சமாளிக்க வேண்டியது முக்கியம். இந்த விஷயத்தை அதாவது முக்கியமான நேரத்தில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை தலைமை பயிற்சியாளர் கும்பிளே இந்திய அணி வீரர்களுக்கு கற்றுக்கொடுப்பார். அவர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.