திரிபுராவை தொடர்ந்து தமிழகத்தில் பெரியாரின் சிலையை அகற்ற வெகுநாட்கள் இல்லை என H.ராஜா ட்விட்டரில் பதிவிட்டது அவரின் சொந்த கருத்து என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்துள்ளது. ஏற்கனவே 5 நாள் விசாரித்த நிலையில் இன்னும் மூன்று நாட்கள் காவல் நீட்டிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சார்நிலைப் பணியாளர் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார் குறித்து, சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசின் பணியாளர் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஐயன் அவர்களை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!
வரும் பிப்.,21 ஆம் நாள் தனது சுற்றுப்பயணத்தினை துவங்கவுள்ள நடிகர் கமலஹாசன் அவர்கள், அன்றைய தினமே தனது கட்சி கொடியினை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஊழல் வழக்கு தொடர்பாக, மத்திய புலனாய்வு துறையானது பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி-யை கைது செய்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு தினகரனின் சகோதரி ஸ்ரீதளதேவி மற்றும் மைத்துனன் மைத்துனர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வே துறைக்கு சொந்தமான பாரம்பரிய ஓட்டல்களை மேம்படுத்த ஒப்பந்தம் செய்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி லாலு பிரசாத், அவரது மனைவி(ராப்ரி தேவி) மற்றும் மகன்(தேஜஷ்வி) மீது சி.பி.ஐ. வழக்கும் பதிவு செய்தது.
விசாரணை தொடர்பாக நேரில் ஆஜராகும்படி இவர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் தங்களுக்கு 15 நாள் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எனவே அக்., மாதம் 5, 6-ம் தேதிகளில் ஆஜராகும்படி சிபிஐ கூறியிருந்தது.
காவல்துறைக்கு வாக்கி - டாக்கி வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதால், இந்த முறைகேடு சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அவரது அறிக்கையில் கூறப்பட்டதாவது:-
தமிழகத்தில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரித்து தடுக்க வேண்டிய அமைப்பான காவல்துறையில் மிகப்பெரிய அளவில் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளன. காவல்துறைக்கு வாக்கி -டாக்கி வாங்குவதில் நடந்த முறைகேடுகள் குறித்து விளக்கமளிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் கடிதம் எழுதியிருப்பது இதை உறுதி செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.