சாரதா நிதி நிறுவன மோசடி போன்று ரோஸ் வேலி நிதி நிறுவனத்திலும் பல கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ரோஸ் வேலி நிதிநிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதீப் பண்டோபாத்யாய் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரை சிபிஐ கைது செய்தது.
பணத்தை பதுக்கி வைத்திருந்ததால் சென்னையில் சேகர் ரெட்டியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சேகர் ரெட்டி என்பவர் அரசு துறைகளின் முக்கிய ஒப்பந்தங்களைப் பெற்று பணிகளை மேற்கொண்டு வந்தார். அவரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், 132 கோடி ரூபாய் மற்றும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறி முதல் செய்யப்பட்டது. அதில், 35 கோடி ரூபாய்க்கு, புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால், சி.பி.ஐ., அமைப்பு விசாரணையில் இறங்கியது. அவர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எம்ப்ரேர் விமான ஒப்பந்ததில் லஞ்சம் பணம் 208 மில்லியன் யுஎஸ் டாலர் கைமாறி இருப்பதாக சிபிஐ எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் என்.ஆர்.ஐ பாதுகாப்பு ஆலோசகர் விபின் கன்னாவை முக்கிய குற்ற்றவாளி என்று சிபிஐ கூறியுள்ளது.
திருப்பூரில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.