தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் கிராம பகுதியில், வே தாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை வெளியிடும் நச்சு புகை காரணமாக அந்த கிராம மக்கள், மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கருச்சிதைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடாததால் ஒருமனதாக அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிடாததால் ஒருமனதாக அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்காக இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் டெங்கு ஒழிய புதிய கருத்துக்களையும், தான் இதுவரை செய்த பணிகளை பற்றி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளது.
எனது கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன். கவுதமபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் பழுது பார்க்கும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தேன்.
இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று மதிமுக தலைவர் வைகோ தனது சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதில் அவர் கூறியுள்ள எச்சரிக்கை என்னவென்றால் :
பாரதிய ஜனதா கட்சியின் 40 மாத கால ஆட்சியில் நாடு அனைத்துத் துறைகளிலும் படு தோல்வி அடைந்து இருக்கின்றது. இந்துத்துவ சக்திகள் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கும், ஜனநாயகத்துக்கும் விடுத்துள்ள அறைகூவல்களால் கொந்தளிப்பான சூழல் நிலவுவது ஒரு புறம்; மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி எழுப்பி வந்த “வளர்ச்சி முழக்கம்” வெற்றுக் கூப்பாடு என்பதும் வெட்ட வெளிச்சம் ஆகி வருகின்றது.
மகாராஷ்டிரா மாநிலமான புனேவில் இருக்கும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக்கல்லூரியின் தலைவராக திரைப்பட இயக்குனர் அனுபம் கெர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் புகழ்பெற்ற பல திரைத்துறை நட்சத்திரங்கள் இந்த கல்லூரியில் படித்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு இக்கல்லூரியின் தலைவராக கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்ட போது பல்வேறு தரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், திரைப்பட இயக்குனர் அனுபம் கெர் அந்த பதவிக்கு இன்று நியமனம் ஆகி உள்ளார்.
தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை உள்ளன.
தமிழக அரசு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்து உடனடியாக சிகிச்சையளிக்கவும் மற்றும் மக்களுக்காக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நடராஜனுக்கு அறுவை சிகிச்சை அளிக்க, செய்த அவசர ஏற்பாடுகளை, ஜெயலலிதாவிற்கு, சசிகலாவின் குடும்பம் ஏன் செய்யவில்லை?' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
திரு. நடராஜன் அவர்களுக்கு நடைபெற்ற மாற்று அறுவை சிகிச்சை அவரது தனி மனித உரிமை.ஆனால் அது பல உண்மைகளை உலகரியச் செய்துள்ளது. எல்லா ஏற்பாடுகளும் சட்ட விதிகளுக்குட்பட்டே நடந்துள்ளது என சொல்லப்பட்டாலும் இந்த உதாரணம் எப்படி ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.