குடியரசுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோருவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள், போராட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தி வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டிய திமுகவினர் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று சட்டசபையில் திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டும் என்று கூறினார்.
புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களை நான் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசு தான் நேரடியாக நியமித்துள்ளது. மேலும் இது சட்டப்படி தான் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அரசுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த விவகாரம் சரி செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பந்த் போராட்டம் தொடங்கியது. இதனையடுத்து புதுச்சேரியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திமுக சார்பில் நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டி, வருகிற 12- ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கழக தோழர்கள் கலந்துகொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதைக்குறித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மு.க ஸ்டாலினுக்கு கண்புரை நோய் இருந்ததால் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சங்கரநேத்ராலயாவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மு.க.ஸ்டாலினுக்கு கண் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு கண்ணில் லென்ஸ் பொருத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்து, வீடு திரும்பிய அவர் ஓரிரு நாள் ஓய்வு எடுக்கிறார். பின்னர் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வார் என தெரிகிறது.
வரும் 17-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாரும் இன்று சென்னை வருகின்றனர்.
இருவரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் எம்.பி., எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராம்நாத் கோவிந்த், மீராகுமார் இருவரும் இன்று ஒரே நாளில் சென்னை வருகின்றனர்.
ராம்நாத் கோவிந்த்:
திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், நதி நீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிட பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுகவின் எதிர்ப்பை மீறி ஜிஎஸ்டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த ஜூன் 13-ம் தேதி தாக்கல் ஜி.எஸ்.டி மசோதா செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா குறித்த விவாதம் நடந்தது.
கடும் அமளிக்கிடையே ஜிஎஸ்டி சட்ட மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, கூவத்தூர் பேரம் வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டார்.
ஆனால், இந்த விவகாரம் கோர்ட்டில் உள்ளதால், தீர்மானத்திற்கு அனுமதி வழங்க சபாநாயகர் தனபால் மறுத்தார். இதனால், திமுக எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் திமுக எம்.எல்.ஏ.,க்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், சபையை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். அமளி தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்தார்.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இதற்க்கு பிறகு பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க் களின் விவாதம் மார்ச் மாதம் 24-ம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் இன்று துவங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ., சரவணன் பேசி வெளியான வீடியோ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினார்.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இதற்க்கு பிறகு பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க் களின் விவாதம் மார்ச் மாதம் 24-ம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழக சட்டசபை கூட்டம் துவங்கியது. அப்போது, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்துநின்று இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இதற்க்கு பிறகு பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க் களின் விவாதம் மார்ச் மாதம் 24-ம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் இன்று துவங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ., சரவணன் பேசி வெளியான வீடியோ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினார்.
புதுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியண்ண அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகிய 3 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டு கொண்டிருந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்ததாக எம்.எல்.ஏ. ரகுபதி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு பெரும்பான்மை குறைந்தால் கவர்னரை சந்திப்போம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கோவூர் குளம் தூர் வாரும் பணியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்:-
தமிழக அரசின் குளம் தூர்வாரப்படுகிறது. தமிழக அரசை பாஜக ஆட்டுவிப்பதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி செய்துள்ளார். ஆட்சியை தக்க வைப்பதில் தான் அதிமுக-வின் கவனம் முழுவதும் உள்ளது.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதிப்பில்லாத வகையில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டு உள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நதிநீர் இணைப்பு மாநாட்டில் பங்கேற்க ஈரோட்டுக்குச் செல்லும் வழியில் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் தி.மு.க. செயல் தலைவ மு.க ஸ்டாலின் பேசினார்.
அப்பொழுது அவர் கூரியதாவது:-
சட்டசபை கூட்டத்தொடர் தொடர்ந்து கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் வலியுறுத்தி வந்தோம். சபாநாயகரை நேரில் சந்தித்தும் அதனை வலியுறுத்தினோம். சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இது வரவேற்கத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.