சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டெங்குவால் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களை இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாவது:-
"டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு, அரசு வழங்கும் தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டி இடப்போவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும், அதில் நேரடியாக போட்டியிடலாம்"
என தெரிவித்தார்.
குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டசபைத் தேர்தல்களின் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 9-ஆம் தேதி இமாச்சலப்பிரதேச தேர்தல் நடைபெறும், பின்னர் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டசபைத் தேர்தல்களின் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. மேலும் குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாகவும், ஹிமாச்சலத் தேர்தல் ஒரே கட்டமாகவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டசபைத் தேர்தல்களின் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாகவும், ஹிமாச்சலத் தேர்தல் ஒரே கட்டமாகவும் நடைபெறும் என தெரிகின்றது.
தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்படும்.
Nirvachan Sadan, 4 PM today: Presser by the Election Commission, to announce schedule for Assembly Elections to Gujarat and Himachal Pradesh pic.twitter.com/rYX4Ic01VX
தமிழக முன்னால் முதல்வர் ஜெ. இறப்பிற்கு பிறகு, தமிழக மக்களை பரபரப்பினிலே வைத்திருக்கின்றது அதிமுக அரசு. தற்போதைய நிலைமையினில் அதிமுக கட்சி யார் வசம் உள்ளது என்பதினை யாராலும் யூகிக்க முடியாத நிலையில் தான் தமிழகம் இருக்கின்றது.
முன்னதாக கட்சியின் பெயரும், சின்னமும் தங்களுக்கு தான் சேர வேண்டும் என சசிகலா தலைமையிலான அணியினரும், துனைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனிடம் மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில காவல்துறை தான் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இன்னும் 6 மாதங்கள் ஆகும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர், நகராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கான பதவிகாலம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், இன்னும் தமிழகத்தில் இன்னும் இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடந்தபாடில்லை.
இந்தியாவின் 21-வது புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி(வயது 64) இன்று பதவி ஏற்றார்.
தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நசிம் ஜைதியின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி(வயது 64) பதவி ஏற்றார். இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார்.
ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து, இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூன் 28-ம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 1-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீதான புகாரை வரும் ஜூன் 3-ம் தேதி முதல் நிரூபிக்கலாம் என தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும் என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்து இருந்தனர். இந்த புகாரை தொடர்ந்தது தேர்தல் ஆணையம் இந்தச் சவாலை விடுத்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி பேசுகையில்:-
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 9-ம் தேதி நடந்த போது பெரும் வன்முறை வெடித்தது. வன்முறையில் 8 பேர் பலியாகினர் மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து ஆனந்த்நாக் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையானது இல்லை என மாநில அரசு தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் மே 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே ஆனந்த்நாக் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 74 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்கு தேவை என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கூறியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.