இன்றைய காலகட்டத்தில் பெண்கள் புகைபிடித்தல் என்பது நாகரிகம் என்றும், ரிலாக்ஸ் ஆக இருப்பதாக எண்ணியும், தன்னையும் அழித்துக்கொண்டு பிறரையும் அழிப்பதுதான் இன்றிய வாழ்க்கையா!
1 சிகரெட் புகையால் ஏற்படும் விளைவுகள் :
ஒவ்வோர் ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதால் உலகில் 60 லட்சம் பேர் பலியாகின்றனர்.
ஆண்டுக்கு சராசரி 83 சதவீதம் பேர் புகையிலையினால் மடிகின்றன.
உலகில் இறக்கும் 10 பேரில் ஒருவர் புகை பிடிப்பதால் இறக்கிறார்.
சிகரெட் புகையை சுவாசிப்போர்களின் இறப்பு எண்ணிக்கை 15%
புகை பிடிப்பவர்கள், புகை பிடிக்காதவர்களைவிட முன்னதாகவே இறந்துபோகிறார்கள்.
இன்று முதல் அமலாகிறது டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு!
டாஸ்மாக் வருவாயை அதிகரிக்க தமிழ அரசு மதுபானங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தது. அதன்படி டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலாகின்றது.
இதன்படி 180மி அளவுள்ள குவாட்டர் ரம், விஸ்கி, பிராந்தி போன்ற பானங்களின் விலை ரூ.12 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் இளைஞர்களை மகிழ்விக்கும் வகையினில் பீரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பெண்களின் தலைமுடி நறுக்கப்படுவது பரப்பரப்பு ஏப்பட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் வீட்டில் உள்ள பெண்களின் தலை முடியை யாரோ மர்மமான முறையில் நறுக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்மேற்கு டெல்லியில் உள்ள சாவ்லா பகுதியில் வீட்டில் இருந்த 4 பெண்களின் தலைமுடி மர்மமான முறையில் நறுக்கப்பட்டுள்ளது.
மதுவுக்கு அடிமையான பெண்கள், மாதவிடாய் நின்றபிறகு தசை சுருக்கத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு புதிய தகவலில் தெரியவந்துள்ளது.
நம் உடலில் ஒரு குறிப்பிட்ட வயது வரை, தசை மற்றும் தோல் பகுதிகள் பொலிவுடன் காணப்படும். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றுக்கு தீவிர அடிமையாக இருக்கும்பட்சத்தில், வெகு விரைவிலேயே நம் உடலின் பொலிவு மங்கிவிடும்.
பெண்கள் கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும்போது, 45 வயதிற்கு மேல், அவர்களின் தோல் மற்றும் சதைப் பகுதி சுருங்கத் தொடங்குவதாக, தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மது கடைக்கு எதிராக தொடரும் பொதுமக்களின் போராட்டம்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மது கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டு, அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் புதிய மது கடைகள் தொடங்கியது தமிழக அரசு.
ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால் தினமும் மது கடைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் அரங்கேறி வருகிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ், பெண்களின் கற்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, வாங்குவது பற்றி பேட்டி அளித்துள்ளார்.
ஆண்கள் மதுபானம் குடிக்கும் அளவுக்குக் கிட்டத்தட்ட பெண்களும் மது அருந்துவதாக ஆய்வறிக்கை.
பி.எம்.ஜே ஓப்பன் என்ற மருத்துவ இதழ் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதாவது 1891-ம் ஆண்டுக்கும் 2001-ம் ஆண்டுக்கும் இடையில் பிறந்த 4 மில்லியன் பேரிடம் ஆய்வு செய்தது.
இந்த மருத்துவ இதழில் புதிய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது அந்த ஆய்வறிக்கையில் ஆண்கள் மதுபானம் குடிக்கும் அளவுக்குக் கிட்டத்தட்ட பெண்களும் மது அருந்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பெண்களைவிட ஆண்கள் குடிப்பழக்கத்தால் உடல்நலப் பாதிப்புக்கு அதிகம் ஆகிறது என தெரியவந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி(25). செங்கல்பட்டு அருகேயுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 24-ம் தேதி அதிகாலையில் அவர் ரெயில் நிலையம் வந்தபோது ராம்குமார் எனபவர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைக்குறித்து பெண்களிடம் சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? என கேட்டபோது அவர்களின் கருத்துகளை கூறினார்கள்.
இந்தி நடிகர் சல்மான் கான், தான் மல்யுத்த வீரராக நடித்துள்ள சுல்தான் படம் குறித்து கடந்த வாரம் பேட்டி அளித்தார். அதில், சுல்தான் படப்பிடிப்பில் மிகவும் சிரமப்பட்டு நடித்ததாக கூறிய சல்மான்கான் தினமும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது நேராக நடந்து செல்ல முடியாமல், பாலியல் பலாத்காரத்துக்குள்ளான ஒரு பெண் எப்படி செல்வாளோ அந்த நிலைமையில் இருக்கிறேன்’என தெரிவித்து இருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.