காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீருக்கு விஜயம் செய்ய முன்வந்ததை ஆளுநர் சத்ய பால் மாலிக் ஏற்றுக்கொண்டார். இன்று காஷ்மீருக்கு ஒன்பது எதிர்க்கட்சி தலைவர்களுடன் சென்று நிலைமையை பார்க்க உள்ளார்.
ஸ்ரீநகரில் ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் ஒரு அங்கமான துக்தாரன் இ மில்லத் அமைப்பின் தலைவி அசியா அன்ட்ராபி தலைமையில் பாகிஸ்தான் தேசிய தினம் அனுசரிக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று திடிரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் ஏற்ப்பட்டது. இந்த தீப்பிடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து ஸ்ரீநகரில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.
ஸ்ரீநகரில் உள்ள கோகோ ஹம்மாமா விமான நிலையத்திற்கு அருகே இன்று(செவ்வாய்) காலை, எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மூலோபாய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளதாள் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் மற்றும் வேன் ஒட்டுனர் காயமடைந்தனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
பாத்தோவில் இருந்து கே.வி. ஸ்கூல், செனானி, கான்வென்ட்டின் மாணவ மாணவிகள் சென்ற வேன், படோவில் மற்றொரு வாகனம் மீது மோதியது.
இச்சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுனர் முஷ்டாக் அகமது, மற்றும் மாணவர்கள் சிகிச்சைக்காக சமுதாய நல மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், உள்பட 22 சமூக வலைதளங்களை காஷ்மீர் அரசு அதிரடியாக தடை செய்துள்ளது. 22 சமூக வலை தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஒரு மாதம் அல்லது மறுஉத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று அம்மாநில உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.கே. கோயல் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி மற்றும் 12-ம் தேதிகளில் ஸ்ரீநகர், அனந்த்நாக் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக இடைத்தேர்தல் நடைபெறும். வரும் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்நிலையில் பிரிவினைவாதிகள் மக்கள் வாக்களிக்க வேண்டாம் என தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தலை புறக்கணிக்குமாறு வீடுவீடாக சென்று கைப்பிரதிகளை அளித்தும் சிலரை மிரட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில், தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.