உன்னால் முடியும் தம்பி என அனைவருக்கும் உணர்த்தி, தன் நடிப்பால் அன்பை வசூலித்த வசூல் ராஜாவாகி, தசாவதாரம் மட்டுமல்லாமல் பல அவதாரங்கள் காட்டி, விஸ்வரூபம் எடுத்து நிற்கும் உலக நாயகனின் பிறந்த நாள் இன்று.
நீர் நிலைகளை சுத்தப்படுத்த வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்த வேண்டியது நமது கடமை. பள்ளிகள், அதற்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் தன்னார்வலர்கள் வேண்டும். முதல்கட்டமாக அதிகதூர் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளோம் -கமல்!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் சமயத்தில் அவர் அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று பரவலாக பேசப்பட்டுவருகிறது.
நடிகர் கமல்ஹானை முதுகெலும்பில்லாத கோழை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலை பற்றி தனது கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதைப்பற்றி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் 4-ம் ஆண்டு நினைவு நாளில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது,
முதல்வர் ஆசை கமல்ஹாசனுக்கு மட்டும் அல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்கலாம். ஆனால் முதல்வர் ஆகுவதற்கு தகுதி வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.