டெல்லியில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவிட் -19-க்கு எதிரான தடுப்பூசி செயல்முறையை திங்கள் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வெண்டி இருக்கும் என ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ ஆதிஷி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தற்போது பெருகி வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5000 குப்பி மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோய் மற்றும் அதற்கான மருந்துகளின் பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
மகாராஷ்டிரா, பீகார், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகமாக காணப்பட்ட கருப்பு பூஞ்சை நோய், இப்போது பிற மாநிலங்களிலும் பரவி வருகிறது. தற்போது தென் மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய இடங்களிலும் மத்திய பிரதேசத்திலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய செய்தி வந்துள்ளன.
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ட்வீட் செய்து, கருப்பு பூஞ்சை பற்றிய தகவல்களை அளித்தார். இந்த நோயின் விவரங்கள், யாருக்கெல்லாம் இதற்கான ஆபத்து உள்ளது, கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள் என்ன, நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று விளக்கியுள்ளார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் நாடு சிக்கியுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, இந்த வாரம் நோய்த்தொற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டாலும், ஆபத்து இன்னும் முழுமையாக விலகவில்லை. எனவே எச்சரிக்கையும் விழிப்புணர்வும் மிக முக்கியம்.
கட்டுக்கடங்காத நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நீண்டகாலமாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) தங்கியிருக்கும் COVID-19 நோயாளிகளில் காணப்படும் மியூகோமைகோசிஸ் அல்லது 'கருப்பு பூஞ்சை' தொற்று, கவனிக்கப்படாவிட்டால் ஆபத்தானதாக மாறக்கூடும் என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 50% பேர் இறக்கிறார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து இந்த நோயின் தீவிரம் தெரிகிறது. இந்த சூழ்நிலையில், இப்போது இந்த மாநிலங்களில் Mucormycosis ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.