இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டோனி துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டில் கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளார். அந்த அகாடமிக்கு எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமி என பெயரிடப்பட்டுள்ளது.
டோனிக்கும் எனக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த பலர் முயற்சி செய்தார்கள் என்று இந்திய கிர்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
டோனியுடன் இருக்கும் உறவு குறித்த கேள்விகளுக்கு கோலி பதில் அளித்தார். அதில், எங்களுக்கு இடையில் விரிசலை உருவாக்கும் நோக்கில் பலரும் பேசினார்கள். ஆனால், நாங்கள் அதுபோன்ற செய்திகளை படிப்பதே இல்லை.
நாங்கள் ஒன்றாக இருப்பதை பார்க்கும் போது அவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். எங்களுக்கிடையில் விரிசல் ஏற்படாதா என்று பார்க்கிறார்கள். நாங்கள் அதனைப்பற்றியெல்லாம் எங்களுக்குள் பேசி சிரித்துக் கொள்வோம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி அவர்களின் மகள் ஸிவா டோனி தான், இந்திய சமூக ஊடகவியலாளர்களின் தற்போதைய செல்லக்குட்டி!
இரண்டு வயதான அவர், சமீப காலமாக தனது Instagram பக்கத்தின் பதிவுகள் மூலம் நெட்டிசன்களின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார்.
அந்த இடத்திற்கு அவர் பொருத்தமானவரும் கூட என்பதை நிறுபிக்கும் வகையினில் அவரது சமீபத்திய வீடியோ பதிவு ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில் அவர், கிருஷ்ணர் பாடல் ஒன்றினை மலையாள மொழியில் பாடி அனைவரது உள்ளங்களையும் கவர்ந்துள்ளார்!
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கலைக்கட்டி கொண்டாடப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் இனைந்து தீபாவளியை கொண்டாடினர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி அவரின் சொந்த ஊரில் உள்ள தியோரி கோவியிலில் சாமி தரிசனம் செய்தார். டோனியின் வருகையால் அங்கு ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர்.
Jharkhand: Cricketer Mahendra Singh Dhoni offered prayers at Deori temple in Bundu's Tamar pic.twitter.com/s0ykN9SEqx
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை கலைக்கட்டி வருகின்றது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் இனைந்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்!
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது வீட்டினில் தீபாவளி கொண்டாடினார். தனது தீபாவளி கொண்டாட்டத்தின் புகைப்படங்களை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பகிர்ந்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இணைத்து உள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலிக்கு இது 30-வது சதம் ஆகும். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.
அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் சாதனை முறியடிக்க கோலிக்கு இன்னும் 20 சதங்கள் தேவை.
ஒருநாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமை இந்தியாவின் முன்னாள் கேப்டன் டோனிக்கு கிடைத்துள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வந்தன. 4 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்றது. நேற்று 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இலங்கை அணியுடன் நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், சாஹல் பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயாவை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றியதன் மூலமாக டோனி இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை அந்நாட்டில் தொடங்க இருக்கிறார்.
தற்போதைய ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பராக உள்ள டோனி துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டின் எம்.எஸ்.டோனி என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க இருக்கிறார்.
இந்த கிரிக்கெட் அகாடமியை ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
கிரிகெட் உலகில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத விசயங்களில் ஒன்று தோனியின் பினிஷிங் ஸ்டைல் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
ஸ்ரீ லண்கவிற்கு எதிராக 2011ஆம் ஆண்டு உலக கோப்பை பைனலில் டோனி அடித்த 6-னை எவராலும் மறந்திருக்க முடியாது.
அந்த வகையில் நடந்த நிகழ்வு ஒன்றின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ-னை காண:-
உசைன் போல்ட் ஒரு சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சமீபத்தில் நடந்த போட்டியில் 100 மீட்டர் தூரத்தினை போல்ட் 9.95 நொடிகளில் கடந்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். எனினும் அவர் மக்களின் மனதை வென்று பிரியா விடைபெற்றார்.
இதுகுறித்து ஸ்ரீலங்கா முன்நாள் கேப்டன் மகேலா ஜெயவர்த்தன ட்விட்டரில் பாராட்டினார். இவரை தொடர்ந்து ஜெயவர்த்தன-வின் ரசிகர் ஒருவர் மறுபதிவிட்டது இணையத்தில் தற்போது பரவி வருகிறது.
ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தோற்றது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
ஸம்பாவின் அசத்தலாக பந்து வீச்சில் ஹைதராபாத் அணி குறைந்த ரன்னே எடுக்க முடிந்தது.
ஸம்பா நான்கு ஓவர் வீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சாதனை செய்யும் 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இரண்டாவதாக ஆடிய புணே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.