திரௌபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் மோகன் ஜீ (Mohan g ) திரைப்படம் எடுப்பது மட்டுமின்றி தற்போது "திரௌபதி என்ற அவருடைய படத்தின் தலைப்பிலேயே ஒரு பதிப்பகத்தையும் தொடங்கியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேற்று திரைப்படத்துரையினர் சந்தித்தனர்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது இவர்களுடன் அமைச்சர் பாண்டியராஜனும் இருந்தார்.
தமிழ் மலையாளம், இந்தி உள்பட 150 படங்களுக்கு மேல் இயக்கிய மலையாள இயக்குநர் மற்றும் நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி(69) உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ‘கலியல்ல கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். இந்த படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தமிழ் மலையாளம், இந்தி என பல படங்களை இயக்கியுள்ளார். மலையாள நடிகர் மம்முட்டியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மேலும் நடிகர் ரஜினி மற்றும் கமலஹாசனை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.
இவர் நடிகை சீமாவை திருமணம் செய்து கொண்டார். அனு, அனி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

தமிழ் திரையுலகில் 80களில் தனக்கென ஒரு கோட்டை அமைத்து வெற்றிநடை போட்ட நடிகர், இயக்குனர் மற்றும் பன்முக திறனாளர் பாண்டியராஜன் அவர்கள் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை தேமுதிக அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
இது விஜயகாந்த் அவர்களின் திரை துறை ரீ-என்ட்ரிக்கான சந்திப்பா? என மக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சந்திப்பினை குறித்து விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.