"நான் நலமாக இருக்கின்றேன்!" - கவுதம் வாசுதேவ் மேனன்!

தன் நலம் பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

Last Updated : Dec 8, 2017, 08:30 AM IST
"நான் நலமாக இருக்கின்றேன்!" - கவுதம் வாசுதேவ் மேனன்! title=

கார் விபத்தில் சிக்கி நொடிப் பொழுதில் உயிர்தப்பிய இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அவர்கள், தான் நலமாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்!

முன்னதாக, மாமல்லபுரத்தில் இருந்து இயக்குனர் கவுதம் மேனன் சென்னைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது செம்மஞ்சேரி அருகே டிப்பர் லாரி மீது அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கவுதம் மேனன் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் கார் நொறுங்கி பலத்த சேதத்துக்கு ஆளாகியுள்ளது. 

இந்த சம்பவத்தில் தான் மீண்டது குறித்தும், தன் நலம் பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

என பதிவிட்டுள்ளார்.

Trending News