CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் தேர்ச்சி 86.7%. இதில் மாணவர்கள் 85.32% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே சமயம் மாணவிகள் 88.67% தேர்ச்சி பெற்று இம்முறையும் மாணவிகளே முதலிடம்.
CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என CBSE நிர்வாகம் அறிவித்து இருந்தது அதன்படி CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.
உத்தரபிரதேச மாநிலத்தின் மாநில பணி நியமன குழுவான, உத்தரப்பிரதேச மாநில பொது பணி துறை ஆனது சுமார் 10768 உதவி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6-ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 2018-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
தமிழகம் நாளை பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவியர்களுக்கும் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநில SSLC தேர்விற்கான் கால அட்டவணையினை அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு அட்டவணையினை அரசின் அதிகாரபூர்வ இணையதளமான keralapareekshabhavan.in -ல் பதிவேற்றியுள்ளது.
ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு ஆண்டு தோறும் நுழைவுத்தேர்வு (ஜேஇஇ) நடத்தப்படுகிறது. பிரதான தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டாக நடத்தப்படும் இத்தேர்வில், பிரதான தேர்வை ஆன்லைன் மூலமும் எழுதுவதற்கான விருப்பத்தேர்வை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஐஐடி மற்றும் என்ஐடி-களில் சேர தகுதி அளிக்கும் அட்வான்ஸ்டு தேர்வையும் 2018 ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடத்த ஐஐடி முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்கி மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் நடக்க உள்ளது.
இந்த தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பிளஸ்-2 தேர்வை 6,737 பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 மாணவர்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும், தனித்தேர்வர்களாக 31 ஆயிரத்து 843 பேரும், சிறைக்கைதிகள் 88 பேரும் எழுதுகிறார்கள். மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 606 பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் நடக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதியுடன் முடிகிறது என்று தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
+2 தேர்வு அட்டவணை:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.