குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனு குறித்து சென்னை காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், வாரந்தோறும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தியும் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
தமக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி கவிஞர் லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் இயக்குநர் சுசி கணேசன் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு எதிராக 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக 217 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் மேல் விசாரணை தொடர்வதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோர் மீது முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அருவறுக்கதக்க கருத்துகளை மறுபதிவிடுவதே நடிகர் எஸ்.வி.சேகரின் வாடிக்கை என்ற ஆதாரங்களை பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மசாஜ் செண்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்தால் சோதனை நடத்த உள்ளூர் காவல் நிலையத்தினருக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட தயரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இடையிலான பிரச்சினையில் எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து தங்களை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, அது நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை 1000 எழுத்துகளில் தெரிவிக்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பித்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்.பி. ஆர் .எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பாக வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி மாநில தேர்தல் ஆணையம் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மனுத்தாக்கல் செய்தது ஏன் என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டத்தைப் பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி 76 லட்சம் ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.