மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். விழுப்புரத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு பின்னர் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார் என்றும், அப்போது அவர் சென்றிடாத தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என்றும் பாஜக கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை அறிவித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை சென்னைக்கு வருவதையொட்டி, ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் சிவராமனிடம் கேட்கலாம்.
நெல்லை எக்ஸ்பிரஸில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பகீர் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு மக்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்றும், ஆனால் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பொன்னை அருகே சுடுகாட்டுக்கு சாலை அமைத்துத் தராததைக் கண்டித்து, நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி வைத்துள்ளனர்.
Voter ID Card Rules:18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல், குடிமக்கள் தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க முடியாது.
குமரி மாவட்டத்தில் நான்காவது தலைமுறையாக மின்சாரம் கிடைக்காமல் தவிக்கும் வலியஏலா கிராமமக்கள், வாக்கு கேட்டு யாரும் வரவேண்டாம் என ஊர் எல்லையில் பேனர் வைத்துள்ளனர்.
திமுக பொய் வாக்குறுதிகளை எடுத்துக்கொண்டு வரும் என்றும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த 511 வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
நாகை அருகே அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
DMK MP Kanimozhi Election Campaign in Coimbatore: கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடியிடம் தாக்கல் செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.