Voter ID Card Rules: நாட்டின் குடிமக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளை செலுத்த வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card) அவசியம். 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல், குடிமக்கள் தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க முடியாது. தாங்கள் வசிக்கும் இடத்தின் சட்ட மன்ற உறுப்பினர்களையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களையோ தேர்ந்தெடுக்க ஒருவர் வாக்களிப்பது அவசியம்.
எனவே, 18 வயது நிறைவடைந்த பிறகு அனைவரும் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்து பெற வேண்டியது அவசியம். வாக்களார் அடையாள அட்டை தொடர்பான விதிகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை. உங்களிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இரண்டு வாக்கு அட்டைகளை வைத்திருப்பது தொடர்பாக விதிகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து எண்ணி பார்த்ததுண்டா...
வாக்காளர் அடையாள அட்டை என்பது அரசு ஆவணம். 18 வயது நிரம்பியவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில், உங்களிடம் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தால், நீங்கள் சிறைக்கு செல்ல நேரிடலாம் என்கின்றன விதிகள். எனவே நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | ஒருவருக்கு Cheque கொடுக்கும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
பொதுப் பிரதிநிதித்துவச் சட்ட விதிகள்
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. தேர்தல் ஆணைய விதிகளின் படி ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. பொதுப் பிரதிநிதித்துவச் சட்டம் 1950ன் கீழ், இரண்டு இடங்களில் வாக்காளராக இருந்தால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். எனவே, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
கூடுதல் வாக்காளர் அடையாள அட்டையை ரத்து செய்வதற்கான நடைமுறை
உங்களிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தால், சில நடைமுறைகளை பின்பற்றி சட்டச் சிக்கலைத் தவிர்க்கலாம். சில காரணங்களால் உங்களிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தால், அவற்றை ரத்து செய்யலாம். இதற்கு நீங்கள் படிவம் எண் 7 ஐ நிரப்ப வேண்டும். பின்னர் அதை இந்திய தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, BLO, SDM அலுவலகத்திலும் இந்தப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக பெறுவதற்கான வழிமுறை
மேலும் வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக பெற விரும்பினால் அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால், அதை வீட்டில் இருந்த படியே எளிதாகச் செய்யலாம். இந்த ஆன்லைன் செயல்முறை முற்றிலும் இலவசம் தான். அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாடாளுமன்ற தேர்தல்
இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்களிக்க, வாக்காளர் அடையாள அட்டை அவசியம். வாக்காளர் அடையாள அட்டை என்பது அடையாள மற்றும் முகவரி சான்றாகவும் செயல்படுகிறது. மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில், முதல் கட்ட தேர்தலில், 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியன் ரயில்வேயின் புதிய விதி அமல்.. பயணிகளே உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ