ஓலா எலக்ட்ரிக் வியாழக்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனது மின்சார ஸ்கூட்டர் 10 தனித்துவமான மற்றும் துடிதுடிப்பான வண்ணங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீங்கள் ஒரு வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அரசாங்கத்தின் Fame 2 கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, மின்சார வாகனம் வாங்குவோருக்கு அரசாங்க மானியம் கிடைக்கும்.
இந்த காலத்தில் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்ல ஓலா, ஊபர் வண்டிகள் நமக்கு மிகவும் உதவுகின்றன. இவை சொந்தமாக கார் இல்லாதவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாய் அமைந்துள்ளன.
ஓலா மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கிய முதல் 24 மணி நேரத்தில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்கூட்டருக்கான முன்பதிவை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஓலா மின்சார ஸ்கூட்டர், உலக அளவில் மிக அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டராகி உள்ளது.
மின்சார வாகன பிரியர்கள் நீண்ட காலமாக காத்திருந்த தருணம் வந்துவிட்டது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஓலா மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தியை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டது. இந்த நிலையில், ஓலா எலக்ட்ரிக் இப்போது அதன் முதல் மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளைத் துவகியுள்ளது.
ஓலா நிறுவனம் சமீப காலங்களில் இந்தியாவில் அதிகமான வளர்ச்சியைக் கண்டு வரும் ஒரு நிறுவனமாகும். இப்போது இந்த நிறுவனம் அதிக அளவு முதலீடுகளையும் பெற்று வருகின்றது.
ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகர்வால் ட்விட்டரில் பகிர்ந்த 56 விநாடி டீஸர் வைரலாகியுள்ளது. டீஸரில், நிறுவனம் ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்களைப் பற்றியும் பகிர்ந்துள்ளது.
நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் மின்சார வாகனங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். வாகன உற்பத்தி நிறுவனங்களும் மின்சார வாகன உற்பத்தியில் முழு வேகம் காட்டி வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, மின்சார ஸ்கூட்டர்கள் நம் வரம்பில் உள்ளன. இவற்றின் விலையும் அம்சங்களும் சாதாரண மக்களுக்கு ஏற்றதாக உள்ளன. இந்தியாவில் விரைவில் வரவுள்ள மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓலா கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதல் மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்க ரூ .2,400 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்த தொழிற்சாலை உருவானவுடன் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்தியாவில் ஓலா (Ola) நிறுவனம் மிகப் பெரிய ஈ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை நிறுவவிருக்கிறது. இரு விநாடிகளில் ஒரு ஸ்கூட்டர் என்ற ஆண்டுதோறும் 10 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.
ஓலா நிறுவனம் தனது புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஓலா எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
செயலி அடிப்படையில் கேப் சேவையை வழங்கும் நிறுவனம் ஓலா, மின்சார வாகனங்களுக்காக ஒரு பெரிய திட்டத்தை தயாரித்துள்ளது. நிறுவனம் தனது புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஓலா எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.