வழக்கமாக டி20 போட்டிகள் என்றாலே விருவிருப்பாக தான் இருக்கும், ஆனால் நேற்று சிட்னியில் நடைப்பெற்ற பிக் பிளாஸ் லீக் போட்டிகளின் இறுதி ஆட்டம், இதுவரை யாரும் பார்காத அளவிற்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது!
'ஹெலிகாப்டர் ஷாட்' பற்றி பேசும்போது, நம் மனதில் தோன்றும் ஒரே பெயர் ’மகேந்திர சிங் தோனி’.
விளையாட்டு வீரரின் வலிமை, நுட்பம் மற்றும் சரியான நேரகனிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சிறப்பான ’ஹெலிகாப்டர் ஷாட்’ அமைகின்றது. இந்த கனிப்பினை நன்கு கற்றுத்தேர்ந்தவர் முன்னால் அணித்தலைவர் தோனி.
இத்தகைய ஹெலிகாப்டர் ஷாட்-னை பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரும் முயற்சி செய்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
சேவாக், வி.வி.எஸ். லட்சுமண் மற்றும் பிரெட் லீ ஆகியோரும் இந்த முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்!
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு!
இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஜிம்பாப்வேயின் ஆக்ரோஷமான பந்து வீச்சால் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 53 ரன்களே எடுத்திருந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் கேதர் ஜாதவ் நிலைத்து நின்று விளையாடி 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். கடைசியாக இந்திய அணியை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இன்று கடைசி டி 20 ஆட்டத்தில் ஹராரே மைதானத்தில் மோதுகின்றன. 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளதால் இன்றைய ஆட்டம் தொடர் வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும்.
இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென் நெட்வொர்க் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. டி 20 போட்டிகளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெல்வது இதுவே முதன் முறையாகும்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.
இரு அணிகளிடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இதைத்தொடர்ந்து இரு அணிகளிடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.
ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் மஸகட்ஸா-சிபாபா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.3 ஓவர்களில் 33 ரன்கள் சேர்த்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் ஜிம்பாப்வே சேர்த்தது. ஜிம்பாப்வே அணி கடைசி 5 ஓவர்களில் 59 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் தரப்பில் ஜஸ்பிரீத் பூம்ரா 4 ஓவர்களில் 24 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைப்பு `தமிழ்நாடு பிரிமீயர் லீக்` (டி.என்.பி.எல்) என்கிற டி20 போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்கான அணிகள் விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.