நடப்பு ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி, வரும் செப்டம்பர் 28ம் தேதி மெக்சிகோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பலரும் கலந்த கொள்ள உள்ள நிலையில், தமிழகத்தில் இதற்கான தகுதி சுற்று போட்டி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று திரும்பும் போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதியும் பிரபல ரவுடியுமான ஹைகோர்ட் மகாராஜாவை தூத்துக்குடி தனிப்படை காவல்துறையினர் நான்கு மாதங்களுக்குப் பிறகு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ்ப் புதல்வன் திட்டத்தை' ஆகஸ்ட் 9-ம் தேதி கோவையில் தொடங்கி வைக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்தது - ஒரு சவரன் ரூ.51,080க்கு விற்பனை; சென்னையில் சொக்கத்தங்கம் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 54,720க்கு விற்பனை; தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம்.
காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்து வருவதாக சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
சாத்தான்குளத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் மனுக்களைப் பெற்று வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
கடந்த சில நாட்களாக பிரியாணி மேன் - இர்பான் - டெய்லர் அக்கா சண்டைதான் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களுக்குள் என்ன தான் சண்டை? தற்கொலை வரை சென்ற இந்த மோதலின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
திருச்செங்கோடு அடுத்த சக்தி நாயக்கன்பாளையம் பகுதியில் பத்து வயது சிறுமி உட்பட 3 பேரை கத்தியால் குத்திய நபரால் கடும் பதற்றம் ஏற்பட்டது. கத்தியால் குத்திய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்ட நிலையில், சிறுமியின் தந்தை கண்ணீர் விட்டு கதறும் வீடியோ காண்போரை கண்கலங்க செய்துள்ளது. நடந்தது என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.