திருப்பூர் மாவட்டம் பஞ்சலிங்க அருவியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் 19-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசாக தமிழகத்தில் மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்திவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார். பக்தர்கள் ஆரவாரத்துடன் செல்பி எடுத்தும் கை குலுக்கியும் மகிழ்ச்சியடைந்தனர்.
பொள்ளாச்சி ஆழியார் கவியருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளை அவசரமாக வெளியேற்றிய வனத்துறையினர் அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து பாட்னா சென்ற சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவருக்கு ரயிலிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் அறிந்த ரயில்வே போலீசார், ரயில் பெரம்பலூர் ரயில் நிலையம் வந்துடன் குழந்தையையும் தாயையும் மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையிலிருந்து கரூர் சென்ற அரசுப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதைத் தன் செல்போனில் வீடியோ எடுத்த பயணி, போக்குவரத்துத் அமைச்சர் சிவசங்கர் இதற்குப் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி அப்படியே நடந்து சென்ற ஒருவர் மீதும் அசுர வேகத்தில் தனியார் பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் என்ன என்பதை காணலாம்.
தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று என்றும், வட மாநிலங்களைப் போல தற்போது தமிழகத்திலும் அதனை தொடங்கியுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.