ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் 'கடம்பன்' படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கேத்ரீன் தெரசா நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த டிரைலரில் ஆர்யாவின் நடிப்பு அசத்தலாக உள்ளது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது தான் இந்த படத்தின் கதை.
டிரைலர் பார்க்க:-
அரசியல் கதை களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் எமன். போன மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. தற்போது, 'எமன்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி. மியா ஜார்ஜ், தியாகராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜீவா ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
டிரைலர்:-
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி உள்ள “புரூஸ் லீ” படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டீஸர் ஏற்கனவே வரவேற்பை பெற்றது.
தற்போது டிரைலர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பந்தா, பாலசரவணன், முனிஸ்காந்த் உள்பட இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிருக்கிறார்.
டிரெய்லர் பார்க்க:-
ஓகே கண்மணி படத்தின் இந்தி ரீமேக் 'ஓகே ஜானு'.
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ காதல் கண்மணி'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஷ்ரதா கபூர் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் போகன். பிரபுதேவின் தயாரிப்பு நிறுவனமான தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் ஜனவரி 26 அன்று வெளிவரவுள்ளது. தற்போது இப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்தப்படத்தில் நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் தியேட்டரிகல் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "கூட்டத்தில் ஒருத்தன்". டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் இசை மற்றும் இப்படத்தின் டிரைலர் வெளியகியுள்ளது.
"என்னோடு" விளையாடு படத்தை ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் பரத், கதிர், சஞ்சிதா ஷெட்டி, சாந்தினி தமிழரசன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படடிற்கு சுதர்சன்.எம் குமார் ரூ ஏ.மோசேஸ் இசை அமைத்துள்ளார். தற்போது 'என்னோடு விளையாடு' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்தப்படத்தில் நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
வின் டீசலுடன் தீபிகா இணைந்து நடித்து வரும் படம் "xXx ரிட்டர்ன் ஆஃப் ஸான்டர் கேஜ்". டி.ஜே.ஸாரூஸோவின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் அடுத்த டிரெய்லர் வெளிபட்டுபட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 'xXx' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
கஹானி படத்தின் இரண்டாம் பாகமான கஹானி 2-ன் டிரெய்லர் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் தன் கணவனைத் தேடி லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் கர்ப்பிணிப் பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களை நுட்பமாகப் பேசிய திரைப்படம் கஹானி. இப்படம் சுஜாய் கோஷேயால் இயக்கப்பட்டுள்ளது. மேலும் வித்யா பாலன், அர்ஜூன் ராம்பால் நடித்துள்ளார்.
ஆர். மணிகண்டன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி, காளி வெங்கட், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் கட்டப்பாவ காணோம். இப்படத்திற்கு சமீர் சந்தோஷ் இசையமைக்க, ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்து வருகிறார். தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது.
குழந்தை வேலப்பன் இயக்கத்தில், கிருஷ்ணா, ஸ்வாதி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் "யாக்கை". இந்த படதிற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது இந்த படதின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
வின் டீசலுடன் தீபிகா இணைந்து நடித்து வரும் படம் "xXx ரிட்டர்ன் ஆஃப் ஸான்டர் கேஜ்". அந்த பட்டின் இரண்டாவது டிரெய்லர் வெளிபட்டுபட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 'xXx' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் குற்றம் 23 படத்தின் டைரக்டர் ஆவார். சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ரெதான் தி சினிமா பீப்பல் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கிறது. இதில் அருண் விஜய் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
டிரெய்லர்:-
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 'தர்மதுரை' ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தர்மதுரை'. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருக்கிறார்.
ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள விக்ரம் நடித்துள்ள படம் இருமுகன்.
இப்படத்தில் நயன்தாரா, நித்யாமேனன் இருவரும் நடித்துள்ளார்கள். விக்ரம் இரு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
தனுஷ் தயாரிப்பில் உருவான படம் அம்மா கணக்கு. தற்போது இப்படத்தின் பாடல்களும் டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளன.
அஸ்வினி ஐயர் திவாரி இந்த படத்தை இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி இன்னும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அம்மா கணக்கு ஜூன் 24-ம் தேதி வெளியாக உள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிக்க உருவாகி உள்ள படம் "தொடரி"
இப்படத்தின் கதை முழுக்க ரயில் பின்னணி கொண்டது. இமான் இசையமைத்திருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் இப்படத்தில் தம்பி ராமையா, கருணாகரன், ஹரிஷ் உத்தமன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள்.
தற்போது படத்தின் டிரைலர் வெளியிடபட்டு உள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 3-வது படம் தான் ‘இறைவி’. இவர் ஏற்கனவே ‘பீட்ஷா’ மற்றும் ‘ஜிகர்தண்டா’என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இறைவி படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜாதேவ்ரியா, கருணாகரன், ராதாரவி, மற்றும் இன்னும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.