விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்று நடைபெறவிருக்கும் மூன்றாவது டி-20 (T20) போட்டி அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 (T20) போட்டிக்கு தங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு நல்ல செய்தி இது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அது பாகிஸ்தான் அணியின் வெற்றிகளை சமன் செய்துவிடும்.
வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால், அந்த அணியின் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் ஒருநாள் டெஸ்ட் மற்றும் ஜிம்பாப்வேவையும் உள்ளடக்கிய முத்தரப்பு டி20 சர்வதேச தொடருக்கான சுற்றுப்பயண தேதிகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது!
ICC-யினால் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஜிம்பாப்வே அணிக்குப் பதிலாக நைஜீரியா ஆடவர், நமீபியா மகளிர் அணியை உலக டி20 தகுதிச் சுற்றுப் போட்டிகளில் களமிறக்க ICC முடிவெடுத்துள்ளது.
நியூஸிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் இந்தியா மோதுகிறது
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இன்று கடைசி டி 20 ஆட்டத்தில் ஹராரே மைதானத்தில் மோதுகின்றன. 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளதால் இன்றைய ஆட்டம் தொடர் வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும்.
இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென் நெட்வொர்க் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. டி 20 போட்டிகளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெல்வது இதுவே முதன் முறையாகும்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.
இரு அணிகளிடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இதைத்தொடர்ந்து இரு அணிகளிடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.
ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் மஸகட்ஸா-சிபாபா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.3 ஓவர்களில் 33 ரன்கள் சேர்த்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் ஜிம்பாப்வே சேர்த்தது. ஜிம்பாப்வே அணி கடைசி 5 ஓவர்களில் 59 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் தரப்பில் ஜஸ்பிரீத் பூம்ரா 4 ஓவர்களில் 24 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட டோணி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே வந்ததுள்ளது.
ஹராரேயில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது. அதே மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.