Russia-Ukraine: பேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து கூகுள் நியூஸிற்கும் ரஷ்யாவில் தடை..!!

ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடக்கிய பிறகு ரஷ்யா மீது உலகின் பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. 

Last Updated : Mar 24, 2022, 04:48 PM IST
  • ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் சுமார் ஒரு மாத காலமாக தொடர்கிறது.
  • உக்ரேனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கை குறித்த போலிச் செய்திகள் தொடர்பான வழக்கு.
  • கூகுள் செய்திகளுக்கு எதிராக ரஷ்யாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனம் நடவடிக்கை.
Russia-Ukraine: பேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து கூகுள் நியூஸிற்கும் ரஷ்யாவில் தடை..!! title=

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர்  சுமார் ஒரு மாத காலமாக தொடர்கிறது. ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடக்கிய பிறகு ரஷ்யா மீது உலகின் பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இருப்பினும், ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. 

உக்ரேனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கை குறித்த போலிச் செய்திகள் மற்றும் ரஷ்யாவில் ஆர்ப்பாட்டங்கள தூண்டு செய்திகளை அகற்றுவதற்கான ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கைகளை புறக்கணிப்பதாக சமூக ஊடக  நிறுவனங்கள் மீதான வழக்கில், சில நாட்களுக்கு முன் அந்நாட்டு நீதிமன்றம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு தடை விதித்தது.  முன்னதாக போலி செய்திகள் தொடர்பாக ட்விட்டரும் தடை செய்யபப்ட்டது.

மேலும் படிக்க | தீவிரவாதத்தை பரப்புவதாக புகார்; பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு ரஷ்யாவில் தடை !

இந்நிலையில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரைத் தொடர்ந்து, ரஷ்யா தற்போது கூகுள் செய்திகளையும் தனது நாட்டில் முடக்கியுள்ளது. கூகுள் செய்திகளுக்கு எதிராக ரஷ்யாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கூகுள் நிறுவனம் பொய்யான செய்திகளை பரப்புவதாக  குற்றம் சட்டப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!

சமீபத்தில் ரஷ்யா ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ரஷ்ய இராணுவத்தை அவதூறு செய்யும் கருத்துக்கள், அறிக்கைகள், செய்திகள்  இந்த சட்டத்தில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சில நாட்களுக்கு முன் 'தீவிரவாத நடவடிக்கைகள்'  தொடர்பான வழக்கில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு மாஸ்கோ நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இரண்டு சமூக ஊடக தளங்களின் தாய் நிறுவனமான 'மெட்டா'வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News