பாபா வங்காவின் கணிப்புகள் எல்லாம் உலக புகழ் பெற்றவை. அவர் தான் தான் இறப்பதற்கு முன்பாக நாட்டு நடப்புகள் குறித்த பல்வேறு கணிப்புகளை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். அந்த கணிப்புகளின்படி ஒவ்வொரு ஆண்டும் சில விஷயங்கள் நடக்க தொடங்கியதால், அவரின் கணிப்புகளை பலர் நம்ப தொடங்கிவிட்டனர். இருப்பினும் இந்த கணிப்புகள் மீது பல்வேறு விமர்சனங்களும் இருக்கிறது. அதேநேரத்தில் அவரது கணிப்புகளை தொடர்ச்சியாக உற்றுநோக்கி வரும் பலர், ஏறத்தாழ 60 விழுக்காட்டுக்கும் மேல் பாபா வங்காவின் கணிப்புகள் அப்படியே நடத்திருப்பதாக அடித்து கூறுகின்றனர்.
மேலும் படிக்க | மனித மூளையில் சிப்... எண்ணங்களால் கணிணி மவுஸை இயக்கும் பக்கவாத நோயாளி!
பாபா வங்கா கணிப்புகள்
குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்ற பாபா வங்காவின் கணிப்புகள் நிஜமாகியுள்ளன. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா தன்னுடைய கணிப்பில் என்ன சொல்லியிருக்கிறார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் கடந்த ஆண்டு இறுதியிலேயே வெளியாக தொடங்கின.
உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்பட்டது. அதன்படி 2024ஆம் ஆண்டில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்றும் மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உயிருக்கு சொந்த நாட்டில் உள்ள ஒருவராலேயே அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசியை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டு அதிபர் புடின் சமீபத்தில் அறிவித்தார்.
இதேபோல் பிரிட்டன் பொருளாதாரமும் சரிவை சந்தித்து வருகிறது. 2024ஆம் ஆண்டு தொடங்கி 2 மாதம் கூட முழுவதுமாக நிறைவடையவில்லை. அதற்குள்ளேயே கணிப்புகள் பலிக்க தொடங்கியுள்ளது. பாபா வங்காவின் கணிப்புகளின் படி பாஸிட்டிவான விஷயங்கள் பலிக்க தொடங்கும் போது மகிழ்ச்சி ஏற்பட்டாலும், நெகட்டிவ் கணிப்புகள் குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
யார் இந்த பாபா வங்கா?
பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வங்கா 1911 ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்த அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்று அழைக்கப்படுத் பாபா வங்கா, கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி மரணம் அடைந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ