Bizarre World News: அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா நகரில் ஒரு பெண் முறையாக சமைக்காத உணவு ஒன்றை உட்கொண்டதனால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறல், அவரின் நான்கு உடல் உறுப்புகளை இழக்க நேரிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மோசமான விளைவுக்கு காரணம் அவர் ஒரு பாக்டீரியா தொற்றுக்கு ஆளானதன் விளைவாகும் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட அமெரிக்க பெண்ணின் நண்பர்கள் தெரிவித்த கருத்துகளின் படி, அதிக ஆபத்தான பாக்டீரியாவில் மாசடைந்த திலாப்பியா மீன்களை, முறையாக வேகவைக்காமல் உட்கொண்டதால் இந்த பாதிப்பு உருவானதாக கூறப்படுகிறது. 40 வயதான லாரா பராஜாஸ் என்ற பெண்மணி, மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சையில் இருந்தார்.
இது பயங்கரமானது
அவருக்கு கடந்த வியாழன் (செப். 14) அன்று உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த அறுவை சிகிச்சை குறித்து பாதிக்கப்பட்ட லாராவின் தோழியான அன்னா மெசினா ஓர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,"இது எங்கள் அனைவருக்கும் மிகவும் கடினமாக இருந்தது. இது பயங்கரமானது.
மேலும் படிக்க | 6.6 கோடி ரூபாய் வீடு வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை... காரணம் என்ன தெரியுமா?
செயற்கை சுவாசம்
இது நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். சான் ஜோஸில் உள்ள உள்ளூர் சந்தையில் வாங்கிய மீன்களை சாப்பிட்ட பிறகே லாரா பராஜாஸ் நோய்வாய்ப்பட்டார். அவர் கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவர் தற்போது கருவியின் மூலமாக செயற்கை சுவாசத்தை பெற்றுக்கொண்டிருக்கிறார்" என்றார்.
கடல் உணவில் ஜாக்கிரதை
"மருத்துவர்கள் லாராவை மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமா நிலைக்கு கொண்டு வந்தனர். அவர் விரல்கள் கருப்பாகவும், அவர் பாதங்கள் கருப்பாகவும், அவரது கீழ் உதடு கருப்பாகவும் இருந்தது. அவர் உடல் முழுவதும் புண்கள் நிறைந்துள்ளன, அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து வருகின்றன" என்று மெசினா மேலும் கூறினார்.
விப்ரியோ வல்னிஃபிகஸ் நோயால் லாரா பாதிக்கப்பட்டதாகக் மெசினா கூறினார், இது பொதுவாக மூல கடல் உணவு மற்றும் கடல் நீரில் காணப்படும் ஒரு கொடிய பாக்டீரியமாகும். இத்தகைய கடுமையான உடல்நல அபாயங்களைத் தவிர்ப்பதற்கு கடல் உணவை முறையாக சமைத்து உண்பதன் முக்கியத்துவத்தை அடிகோட்டி காட்டுகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,"இந்த பாக்டீரியாவால் நீங்கள் பாதிக்கப்படுவதற்கான வழிகளில் ஒன்று, மாசடைந்த ஒன்றை நீங்கள் சாப்பிடலாம். மேலும், உங்களின் வெட்டு காயத்தையோ அல்லது டாட்டூவையோ இந்த பாக்டீரியா இருக்கும் தண்ணீரில் வைப்பது மற்றொரு முறையில் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ